புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: சூலக்கரை, விருதுநகர், 626003
மாவட்டம்: விருதுநகர்
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: விருதுநகர்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித செபமாலை அன்னை ஆலயம், நிறைவாழ்வுநகர், விருதுநகர்
பங்குத்தந்தை: அருட்பணி. ஆ. அந்தோனி சாமி
குடும்பங்கள்: 36
அன்பியம்: 1
செவ்வாய் மாலை 07:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 07:00 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர்
திருவிழா: ஜூன் மாதத்தில்
வழித்தடம்: விருதுநகர் -சாத்தூர். விருதுநகரிலிருந்து 5கி.மீ தொலைவில் சூலக்கரை அமைந்துள்ளது.
Location map: https://g.co/kgs/p6ZQDA
வரலாறு:
1977-ஆம் ஆண்டு சூலக்கரையில் ஏழு கத்தோலிக்க குடும்பங்கள் இருந்தன. ஒவ்வொரு வீடும் சற்று தொலைவாக இருந்தது. அப்பொழுது விருதுநகர் புனித இஞ்ஞாசியார் பங்கின் கிளைப்பங்காக சூலக்கரை இருந்தது. பங்குத்தந்தை அருட்பணி. A. S. குழந்தை சாமி அவர்கள் மாதத்திற்கு ஒருமுறை வீடு வீடாகச் சென்று, திருப்பலி நிறைவேற்றியுள்ளார். மேலும் ஆலயம் கட்டுவதற்காக (100 சென்ட்) 1 ஏக்கர் நிலத்தை தமது முயற்சியால் வாங்கினார். 1986 -ஆம் ஆண்டு அந்த இடத்தில் புனித அந்தோனியார் சிறிய கெபியானது, அருள்பணி. ஞானப்பிரகாசம் முயற்சியால் கட்டப்பட்டது. 1991-ஆம் ஆண்டு அருள்பணி. மனுவேல் அக்கெபியை சின்ன விரிவாக்கம் செய்தார்.
2011-ஆம் ஆண்டு அருள்பணி. யா. ஆரோக்கியம் முயற்சியால் ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்து, புனித அந்தோனியார் கெபி விரிவாக்கப்பட்டு சிற்றாலயம் ஆனது.
2017-ஆம் ஆண்டு விருதுநகர் பங்கிலிருந்து பிரிந்து, நிறைவாழ்வு நகர் புனித செபமாலை அன்னை ஆலயம் தனிப்பங்காக உருவானது. அதுமுதல் சூலக்கரை ஆலயமானது, நிறைவாழ்வு நகர் பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
சூலக்கரை புனித அந்தோனியார் சிற்றாலயத்தை நோக்கி ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் வரக்கூடிய மக்கள் எண்ணிக்கை பெருகியது. பழைய சிற்றாலயத்தை இடித்துவிட்டு புதிய ஆலயம் கட்டுவது என்ற முடிவை நிறைவாழ்வு நகர் முதல் பங்குதந்தை அருள்பணி. தாமஸ் பி. வெனிஸ் அவர்கள், மக்களின் பேராதவரோடு எடுத்தார்.
அதன்பின் 07.03.2019 அன்று மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நிறைவாழ்வு நகர் மற்றும் விருதுநகர் சூலக்கரை பங்கு இறைமக்களின் தாராளமான நன்கொடை மூலம் தற்போது உள்ள இந்த எழில் மிகு புனித அந்தோனியார் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 27.02.2022 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு யுவான் அம்புரோஸ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாலயம் நோக்கி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, பிற சமயத்தை சார்ந்தவர்களும் வந்து வேண்டுதல்கள் செய்வதையும் ,வேண்டுதல்கள் நிறைவேறிய பின், உணவு அல்லது பொங்கல் வைத்து நன்றி செலுத்துவதையும் செவ்வாய்க்கிழமைகளில் காணலாம். பலர் உடல் நோயிலிருந்து நலம் பெற்றுள்ளனர். திருமண தடை நீங்கி பலருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு வேண்டி, காணாமல் போன பொருள் கிடைக்க என்று வேண்டுதல்கள் வைத்தவர்கள் புனித அந்தோனியாரின் வல்லமையால், அவர்கள் வேண்டுதல் நிறைவேறியது என்று சாட்சிகள் கூறியுள்ளனர். சூலக்கரையில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு, விருதுநகர், நிறைவாழ்வு நகர், இனாம்ரெட்டியபட்டி, கன்னிசேரி, திருமங்கலம், அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, சாத்தூர் ஆகிய இடங்களிலிருந்து மக்கள் வந்து செல்கின்றனர். சிலர் பாதயாத்திரையாகவும் வந்து செல்கின்றனர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருள்பணி. ஆ. அந்தோனி சாமி அவர்கள்.