புனித யூதா ததேயு ஆலயம்
இடம்: இறச்சகுளம்
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: கோட்டார்
மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்கு: புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், ஆனைபொற்றை
பங்குத்தந்தை அருட்பணி. அருள் யூஜின் ராய்
குடும்பங்கள்: 90
அன்பியங்கள்: 5
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி
வியாழன் மாலை 06:30 மணி ஜெபமாலை, 07:00 மணி திருப்பலி
வெள்ளி மாலை 06:30 மணி ஜெபமாலை, மாலை 07:00 மணி திருப்பலி
திருவிழா: புனித யூதா ததேயு நாளாகிய அக்டோபர் மாதம் 28-ம் தேதியை மையமாகக் கொண்டு ஐந்து நாட்கள்.
வழித்தடம்: நாகர்கோவில் -தடம் எண் 4 பேருந்துகள்
Location Map: https://g.co/kgs/tSRzvh
வரலாறு:
1970 ஆம் ஆண்டுக்கு முன் இறச்சகுளம் பருதியில் வாழ்ந்த கத்தோலிக்கர்கள் மார்த்தால் புனித அசிசியார் ஆலயத்திற்கு வழிபாடுகளுக்கு சென்று வந்தனர். 1972 முதல் 1978 வரை மார்த்தாலில் பங்குப் பணியாளராக இருந்த அருட்பணி. மார்ட்டின் அலங்காரம் இம்மக்களின் ஆர்வத்தைப் பார்த்து இறச்சகுளம் பகுதியில் கிளைப்பங்கு உருவாக்கும் எண்ணத்தில், ஆயர் மேதகு ஆரோக்கிய சாமியின் உதவியால் தற்போதைய ஆலயம் அமைந்திருக்கும் இடத்தை விலைக்கு வாங்கினார்கள். ஆலயத்தை இவ்விடத்தில் கட்டுவதற்கு முன்பு வீட்டு திருப்பலிகள் நடைபெற்றன. இந்த வீட்டுமுற்ற திருப்பலிகளில் புத்தேரி, ஆனைபொற்றை, பேச்சான்குளம், இறச்சகுளம், நாவல்காடு பகுதியை சார்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
முதலில் ஓலையால் வேயப்பட்ட ஆலயம், பிறகு ஓடு போடப்பட்ட ஆலயம் தொடர்ந்து கான்கிரீட் கூரை என ஆலயம் உருமாறியது. ஐந்து குடும்பம், பத்து குடும்பம் என பங்கு வளர்ந்தது. ஓடு போடப்பட்ட ஆலயம் 1979 ஆம் ஆண்டு அரச்சிக்கப்பட்டது. 1998 இல் இது காங்கிரீட் கூரையாக மாறியது.
2003 ஆம் ஆண்டு முதல் இறச்சகுளம், சீதப்பாலின் கிளைப்பங்கானது. 2015 ஆம் ஆண்டு இறச்சகுளம் தனிப் பங்காக உருவானது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. பெர்பெச்சுவல் ஆன்றனி அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார்.
தொடக்கத்தில் மாதத்திற்கு ஒரு திருப்பலி நடைபெற்று வந்தது. ஆலயம் அமைந்த பிறது, ஞாயிறு திருப்பலி, 2003 க்கு பிறகு ஞாயிறு மற்றும் வியாழன் திருப்பலி என இப்பங்கு வளர்ந்தது. மாதா பக்தியின் வெளிப்பாடாக இங்கு வேளாங்கண்ணி மாதா குருசடியும், லூர்து மாதா கெபியும் கட்டப்பட்டது.
2006 ஆம் ஆண்டிலிருந்து புனித வார வழிபாடுகள் இவ்வாலயத்தில் நடைபெற ஆரம்பித்தன.
ஆலயமானது பழுதடைந்த காரணத்தால் அதனை அகற்றிவிட்டு, 2016 ஆம் ஆண்டு புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பங்குத்தந்தை அருட்பணி. பெர்பெச்சுவல் அவர்களின் முயற்சி மற்றும் வழிகாட்டலில் மக்களின் நிதி பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் தற்போதைய அழகிய ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டு, 24.10.2018 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
இறச்சகுளம் முக்கிய மறைபரப்பு தளமாக இருப்பதால் புத்தேரி பஞ்சாயத்து, கனியாகுளம் பஞ்சாயத்து, இறச்சகுளம் பஞ்சாயத்து, ஈசாந்திமங்கலம் பஞ்சாயத்து போன்ற பரந்த எல்லைகளைக் கொண்டது. ஐயப்பா பெண்கள் கல்லூரி, சுங்கான்கடை சுஷ்ருஷா மருத்துவமனை, களியங்காடு ரோடு, கனியாகுளம், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, தேவிகுளம், ஆலம்பாறை, அழகர்கோணம், சன்கல்லூரி, ஜேம்ஸ் கல்லூரி, நாவல்காடு, ஈசாந்திமங்கலம், அரசன்குழி இறச்சகுளம், தாழக்குடி சாலை, வீராணமங்கலம், புத்தேரி ஊர், கணேஷ் நகர், மேலபுத்தேரி, புத்தேரி கலங்கடி, ஆனைப்பொத்தை, புளியடி, ஜீவா நகர், அருள்ஞான புரம், காந்தி புரம், இந்திரா காலனி, விஷ்ணுபுரம் காலனி, தென்றல் நகர், பாரதி நகர், ததேயுஸ் புரம் பேச்சான் குளம், புத்தேரி இரயில்வே மேம்பாலம், கீழ புத்தேரி என பல பகுதிகளைக் கொண்டது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. அருட்பணிப்பேரவை.
2. நிதிக்குழு
3. தணிக்கை குழு
4. பாடகற்குழு
5. வழிபாட்டுக்குழு
6. பீடச்சிறார்
7. மரியாயின் சேனை
8. புனித வின்சென்ட் தே பவுல் சபை
9. இளையோர் இயக்கம்
10. பாலர் சபை
11. சிறார் இயக்கம்,
12. அன்பிய ஒருங்கிணையம்
மார்த்தால் பங்கின் கிளைப்பங்காக இறச்சகுளம் செயல்பட்டு வந்தபோது பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. மார்ட்டின் அலங்காரம் (1972-1978)
2. அருட்பணி. S. அருளப்பன் (1978-1982)
3. அருட்பணி. S. ஜோசப் (1982-1990)
4. அருட்பணி. P. K. செல்லையன் (1990-1993)
5. அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (1993-1996)
6. அருட்பணி. மரியமிக்கேல் (1996-2001)
7. அருட்பணி. லியோ அலெக்ஸ் (2001-2003)
8. அருட்பணி. பெர்பெச்சுவல் ஆன்றனி (2003---)
சீதப்பால் பங்கின் கீழ்:
1. அருட்பணி. அந்தோணியப்பன் (13-08-2003 -04.11.2005)
2. அருட்பணி. பென்சிகர் (04.11.2005 -16.05.2010)
3. அருட்பணி. கில்பர்ட் லிங்சன் (16.05.2010 -07.02.2013)
4. அருட்பணி. கிறிஸ்டோ டாபின் (07.02.2013 -25.06.2015)
இறச்சகுளம் தனிப் பங்கானது முதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. பெர்பெச்சுவல் ஆன்றனி (25.06.2015 -ஜூன்2019)
2. அருட்பணி. மைக்கேல் ஜோசப் கார்லிம்ஸ் (2019ஜூன் -2020அக்டோபர்)
3. அருட்பணி. பேட்ரிக் சேவியர் (2020அக் -2021ஜூன்)
4. அருட்பணி. தார்சியுஸ் ராஜ் (2021ஜூன் -2022ஜூலை)
5. அருட்பணி. பிரான்சிஸ் சேவியர்
6. அருட்பணி. நித்திய சகாயம் (2022ஜூலை -2022செப்)
7. அருட்பணி. ஞானதாஸ் (2022செப் -2023ஜூன்)
8. அருட்பணி. அருள் யூஜின் ராய் (2023 ஜூன்...)
எண்ணிலடங்கா நன்மைகள் புரியும் இறச்சகுளம் புனித யூதா ததேயுவின் ஆலயம் வாருங்கள்!!! இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...!
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. அருள் யூஜின் ராய் அவர்கள் மற்றும் ஆலய உறுப்பினர்கள்.