தூய இருதய ஆண்டவர் ஆலயம்
இடம்: ஓசூர்
மாவட்டம்: கிருஷ்ணகிரி
மறைமாவட்டம்: தருமபுரி
மறைவட்டம்: ஓசூர்
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை அருள்பணி. M. ஜார்ஜ்
உதவி பங்குத்தந்தை அருள்பணி. M. அலெக்ஸ்
ஆன்மீகக்குரு அருள்பணி. A. ரொசாரியோ
குடும்பங்கள்: 900+
அன்பியங்கள்: 40
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 06:30மணி, 08:30 மணி, காலை 11:00 மணி (ஆங்கிலம்), மாலை 06:00 மணி
திங்கள், செவ்வாய், புதன், சனி திருப்பலி காலை 06:30 மணி
வெள்ளி காலை 06:30 மணி திருப்பலி, மாலை 06:00 மணி திருப்பலி, நற்கருணை ஆராதனை
செவ்வாய் மாலை 06:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
வியாழன் மாலை 06:00 மணி குழந்தை இயேசு நவநாள் திருப்பலி
சனி மாலை 06:00 மணி தூய சகாய மாதா நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி காலை 06:30 மணி திருப்பலி. காலை 10:30 மணி குணமளிக்கும் திருப்பலி, நற்கருணை ஆராதனை. மாலை 06:00 மணி திருப்பலி, திரு இருதய ஆண்டவர் செபவழிபாடு, நற்கருணை பவனி
மாதத்தின் இரண்டாவது சனி மாலை 06:00 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி, தேர்பவனி
மாதத்தின் மூன்றாவது செவ்வாய் மாலை 06:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி, தேர்பவனி
மாதத்தின் முதல் ஞாயிறு காலை 08:30 மணி சிறுவர் சிறப்பு திருப்பலி
திருவிழா: ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. Fr. Arokiasamy
2. Fr. Babu, OFM Cap
3. Fr. Vijay
4. Fr. Francis Vinoth Raj, HGN
5. Sr. Gracy Geetha
வழித்தடம்: ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில், ரிங்ரோடு சந்திப்பில் பாலாஜிநகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Location map: https://maps.app.goo.gl/Q5jchzZiHkqvFs9bA
வரலாறு :
கி.பி.1207ஆம் ஆண்டளவில் பாகலூர் சிற்றரசனால் உருவாக்கப்பட்ட ஊர் ஹோச+ஊர் = "புதிய ஓர்" (கன்னடம்) என்ற பொருளில் பின்னர் மருவி "ஓசூர்" என்று அழைக்கப்படுகிறது. ஓசூர் இன்று ஒரு தொழில் நகரமாக வளர்ந்துள்ளது. 1960 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓசூரில் கிறிஸ்தவர்கள் இருந்ததாக குறிப்புகள் எதுவும் இல்லை. ஓசூர் தொழில் நகரமாக வளர்ந்துவந்த காலக்கட்டங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, இந்தியாவின் பிறப்பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறத் துவங்கினார். இதில் சில கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் உண்டு.
ஓசூரில் குடியேறிய கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தேவைகளை, மத்திகிரி பங்குத்தந்தையர் நிறைவேற்றி வந்தனர். இவர்களுக்கான ஆலயம் ஒன்றைக் கட்டியெழுப்ப, மத்திகிரியின் அன்றைய பங்குத்தந்தையான அருள்பணி. T. C. ஜோசப் அடிகளாரின் முயற்சியால் 18-3-1975 அன்று 0.50 சென்ட் நிலம் தேன்கனிக்கோட்டை சாலையில் வாங்கப்பட்டது. மத்திகிரியில் உதவி பங்குகுருவாக இருந்த அருள்பணி. ஜோவான்னெஸ் கோபு அடிகளாரின் மேற்பார்வையில் அந்நிலத்தில் ஆலயம் ஒன்று 1977ம் ஆண்டு கட்டியெழுப்பப்பட்டு, சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ அவர்கள் புனிதப்படுத்தி திருஇருதய ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்.
1979ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓசூர் புதிய பங்காக உருவாக்கப்பட்டது. ஒன்னல்வாடி, சென்னத்தூர் ஆகியவை இதன் கிளைப்பங்குகளாயின. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. A. ஜோசப் அடிகளார் பொறுப்பேற்றார். அப்போது ஓசூர் நகரில் ஏறக்குறைய 50 கத்தோலிக்க குடும்பங்கள் குடியேறியிருந்தன. அருள்பணி. A. ஜோசப் அவர்கள் ஆலய திருப்பண்ட அறையில் வசித்துக் கொண்டே, பங்குத்தந்தை இல்லத்தைக் கட்டினார்.
1985ஆம் ஆண்டு அன்றைய பங்குத்தந்தை அருள்பணி. I. மரியசூசை அடிகளாரின் முயற்சியால் நிலம் வாங்கப்பட்டு, செயிண்ட் மேரிஸ் நகர் என்ற குடியிருப்பு உருவாக்கப்பட்டது. அவ்விடத்தில் சிற்றாலயம் ஒன்றும் கட்டப்பட்டது. ஆலய மணி நிறுவப்பட்டது. பாகலூர் பங்கு ஆலயம் கட்ட 1.25 ஏக்கர் நிலம் மற்றும் பள்ளிக்கூடம் அமைக்க 3 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. மேலும் பாகலூர் கிளைப் பங்காக உருவானது.
அருட்பணி. S. பிரான்சிஸ் சேவியர் பணிக்காலத்தில் (1989-1991) ஒன்னல்வாடி தூய சகாய மாதா ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணி. M. டோமினிக் அவர்களால் ஆலய அடித்தரை மொசைக், ஆலய மணிக்கோபுரம், சிப்காட் புனித சூசையப்பர் ஆலய மேற்கூரை ஆகியவை அமைக்கப்பட்டது.
அருட்பணி. N. S. இருதயநாதன் அவர்களால் பங்குத்தந்தை இல்லம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அருட்பணி. S. ஹென்றி ஜார்ஜ் அவர்கள், கல்லறை குழு உருவாக்கி, மக்களின் ஒத்துழைப்புடன் கல்லறைத் தோட்டத்திற்கு 1.50 ஏக்கர் இடம் வாங்கினார். மேலும் ஒன்னல்வாடியில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. ஓசூர் பங்கிலிருந்து பாகலூர் 10.04.1999 அன்றும், சிப்காட் 12.07.2000 அன்றும், ஒன்னல்வாடி 30.08.2002 அன்றும் தனிப்பங்குகளாயின.
அருட்பணி. R. அருள் ராஜ் அவர்களால் 40 அன்பியங்கள் உருவாக்கப்பட்டது.
ஓசூரில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை பெருகி ஏறக்குறைய 800 கத்தோலிக்க குடும்பங்களாயின. எனவே ஆலய விரிவாக்கம் அவசியமானது. பங்குத்தந்தை அருள்பணி. R. அருள்ராஜ் அடிகளாரின் முயற்சியாலும், ஓசூர் கத்தோலிக்க மக்களின் தளராத ஒத்துழைப்பாலும், புதிய ஆலயம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. முன்பிருந்த ஆலயமும், பங்குத்தந்தை இல்லமும் அகற்றப்பட்டு, புதிய பங்குத்தந்தை இல்லமும், ஆலயமும், தூய ஆரோக்கிய அன்னை கெபியும் கட்ட திட்டமிடப்பட்டது.
புதிய ஆலய கட்டுமானப் பணிகளை 6.9.2009 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ், SDB அவர்கள் ஆசீர்வதித்து தொடங்கி வைத்தார். அடித்தளத்துடன் கட்டப்பட்ட புதிய ஆலயத்தை 20-8-2012 அன்று தருமபுரி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ், SDB அவர்கள் திறந்து வைத்தார். தருமபுரி மறைமாவட்ட இந்நாள் ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்கள் ஆலயத்தை புனிதப்படுத்தி திருப்பலி நிறைவேற்றினார்.
மேலும் அருட்பணி. R. அருள் ராஜ் அவர்கள், டிவைன் நகரில் இறைமக்களின் ஆதரவோடு 1 ஏக்கர் நிலம் வாங்கி, புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயமும், சமுதாயக் கூடமும் எழுப்பி, டிவைன் நகரைத் தனிப்பங்காக உயர்த்தினார்.
🫐கல்லறைத் தோட்டத்தில் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், அருள்பணி. M. ஜார்ஜ் அவர்கள் முயற்சியால் சிற்றாலயம் கட்டப்பட்டது.
மத்திகிரியில் இருந்த மரியாயின் ஊழியர் சபை கன்னியர்கள் (FSM), 1962ஆம் ஆண்டில் ஓசூரில் மழலையர் பள்ளி ஒன்றை ஆரம்பித்து தங்கள் பணியைத் துவங்கினர். மத்திகிரியிலிருந்து தினமும் ஓசூர் வந்து சென்றனர். பின்னர் குடிசைகள் அமைத்து ஓசூரிலேயே தங்கினர். 1965ஆம் ஆண்டு ஜான்போஸ்கோ துவக்கப்பள்ளியாக உயர்ந்தது. 1976 ஆம் ஆண்டில் கன்னியர்களுக்கு புதிய இல்லம் கட்டப்பட்டது.
ஜான் போஸ்கோ துவக்கப்பள்ளி 1979 ஆம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாகவும், 1998 இல் உயர்நிலைப் பள்ளியாகவும், 2006 இல் மேனிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. FSM சகோதரிகள் கல்விப் பணியோடு, ஓசூரில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
1982ஆம் ஆண்டு இயேசுவின் சிறிய சகோதரிகள் ஓசூரில் தங்கள் இல்லத்தை அமைத்தனர். இவர்களுடைய எளிய வாழ்வு, கடின உழைப்பு ஆகியவற்றால் நற்செய்தி அறிவிக்கும் வாழ்க்கையை தொடர்கின்றனர்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. பங்குக் குழு
2. பீடப்பூக்கள்
3. பாடற்குழு
4. மரியாயின் சேனை
5. அருங்கொடை செபக்குழு
6. புனித வின்சென்ட் தே பவுல் சபை
7. சிறுவழி இயக்கம்
8. இளைஞர் இயக்கம்
9. வழிபாட்டுக் குழு
10. மறைக்கல்வி
சிற்றாலயம்:
செயின்ட் மேரிஸ் நகர் சிற்றாலயம்
பங்கின் கெபிகள்:
1. புனித ஆரோக்கிய மாதா கெபி
2. புனித அந்தோனியார் கெபி
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
Fr. T. C. Joseph (P.P Mathigiri, Founder of the Old Church 1977)
Fr. Johnas Gopu (Asst. P.P Builder of the Old Church 1978)
1. Fr. A. Joseph (1979June -1983June) First P.P
2. Msgr. I. Maria Soosai (1983June -1989June)
3. Fr. S. Francis Xavier (1989June -1991June)
4. Msgr. M. Dominic (1991June -1995June)
5. Fr. N. S. Irudayanathan (1995June -1999June)
6. Fr. S. Henry George (1999June -2005June)
7. Fr. R. Arul Raj (2005June -2013May)
8. Fr. S. Maria Joseph (2013May -2018May)
9. Fr. M. Soosai (2018May -2023)
10. Fr. M. George (2023....)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:
பங்குத்தந்தை அருட்பணி. M. ஜார்ஜ் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்பணி. M. அலெக்ஸ்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: அருட்பணி. மோசஸ் மற்றும் திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி.