936 தூய அமல அன்னை ஆலயம், கிறிஸ்துபாளையம்

   


தூய அமல அன்னை ஆலயம்

இடம்: கிறிஸ்துபாளையம், மருதனபள்ளி, 635107

மாவட்டம் : கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: தேன்கனிக்கோட்டை

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருள்பணி. சிரில் பால்ராஜ்

குடும்பங்கள்: 130

அன்பியங்கள்: 5

திருப்பலி நேரங்கள்: 

ஞாயிறு காலை 09:00 மணி

திங்கள், புதன் காலை 06:15 மணி

செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மாலை 06:30 மணி

பங்குத் திருவிழா : பிப்ரவரி 2

மண்ணின் இறையழைத்தல்கள் :

1.Msgr. Arulraj

2.Fr. Yesudas

3.Fr. Sundar 

Sisters: 6

வழித்தடம்: தேன்கனிக்கோட்டை -யிலிருந்து தளி செல்லும் சாலையில், 4 கி.மீ. தொலைவில் உள்ளது SN.பாளையம். அங்கிருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது கிறிஸ்துபாளையம் ஆலயம்.

Map: https://maps.app.goo.gl/8Rmhg6hUbxfsxErs6

வரலாறு :

மருதனப்பள்ளி பகுதியில் 1670ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவம் அறிமுகமாயிருக்கிறது. 1859-1875 ஆண்டுகள் பற்றிய அருள்தந்தை M.S. ஜோசப் குறிப்பிடுகையில் "மரதனஹள்ளி கிறிஸ்தவர்கள் தங்கள் பழைய கிராமமான சிலுவைபாளையம் விட்டு, புதிய கிராமமான கிறிஸ்துகுப்பத்தில் குடியேறினர்"  (பக்கம்133) என்று குறிப்பிடுகிறார். 

மத்திகிரி பதிவேடுகளில் 1901ஆம் ஆண்டு தான் முதல்முறையாக கிறிஸ்துபாளையம் என்று குறிப்பிடப்படுகிறது என்பதை, அருட்தந்தை லெக்ரான், MEP குறிப்பிடுகின்றார். 1860ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட குடியேற்றம் 1901ஆம் ஆண்டில் கிறிஸ்துபாளையம் என்ற பெயர் பெற்றிருக்கலாம். கிறிஸ்துபாளையம், மருதனபள்ளி என்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1897முதல் 1902 வரை மத்திகிரி பங்கில் பணியாற்றிய அருள்தந்தை ஓசுவெக், MEP (Auzuech) கிறிஸ்துபாளையத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டினார். 1930ஆம் ஆண்டு வரை மத்திகிரி பங்கின் கிளைப்பங்காகவும், 1930 முதல் 1951 வரை மதகொண்டபள்ளியின் கிளைப்பங்காகவும் கிறிஸ்து பாளையம் இருந்தது. 

பின்னர் 1951இல் கிறிஸ்துபாளையம் தனிந்பங்கானது. தாசரப்பள்ளி. கிறிஸ்துபாளையத்தின் கிளைப்பங்கானது. 1951இல் தந்தை சொல்வினா, MEP (Solvignon) பணியாற்றினார். 1952 முதல் 1955 வரை தந்தை கிரேவியர் பங்குதந்தையாகப் பணியாற்றினார். 1955இல் அருள்தந்தை A.L.இருதயம் பங்குதந்தையானார். 1956 ஆம் ஆண்டின் இறுதியில் தனது இருப்பிடத்தை தாசரப்பள்ளிக்கு மாற்றினார். பின்னர் 1957 முதல் 1959 வரை தாசரப்பள்ளியின் கிளைப்பங்காக கிறிஸ்துபாளையம் இருந்தது. 

1979ஆம் ஆண்டு மீண்டும் கிறிஸ்து பாளையம் பங்காக அறிவிக்கப்பட்டு, அருள்தந்தை A. பெலவேந்திரம் பங்குதந்தையாகப் பொறுப்பேற்றார்.

தாசரப்பள்ளியின் கிளைப் பங்காக இருந்த கெம்பத்பள்ளி, 1999ஆம் ஆண்டு முதல் கிறிஸ்துபாளையம் பங்குடன் இணைக்கப் பட்டது. கெம்பத்பள்ளியில் 1936இல் வாங்கப்பட்ட நிலத்தில் ஒரு சிற்றாலயம் இருந்தது. பின்னர் 1960ஆம் ஆண்டளவில் திரு. பெத்த ஆரோக்கியப்பா அவர்கள் அளித்த நிலத்தில் ஆலயம் கட்டப்பட்டது. தற்போது அவ்வாலயமும் இடிக்கப்பட்டு 2022 இல் புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, மறைபணிதலமாக செயல்பட்டு வருகிறது.

கிறிஸ்து பாளையத்தில் புதிய பங்கு ஆலயம் உருவாக உழைத்தவர் அருள்திரு. P. லூர்துசாமி அடிகளார். பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற பின் 2-2-1998 அன்று லூர்து அன்னை கெபியை கட்டி முடித்தார். பின்னர் அவரால் இன்றைய எழில்மிகு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 26-04-2001 அன்று

அன்றைய தருமபுரி ஆயர் மேதகு ஜோசப் அந்தோனி இருதயராஜ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. 

அருள்தந்தை தாமஸ் பங்குத்தந்தையாக இருந்தபோது குருக்களுக்கான புதிய இல்லம் கட்டப்பட்டு 2-2-2003 அன்று அன்றைய ஆயரால் திறந்து வைக்கப்பட்டது.

1965ஆம் ஆண்டு துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு துவங்கப்பட்டு 1987இல் உயர்நிலைப் பள்ளியாகவும், 1998ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 

புனித ஜான் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளிக்காக தளி-தேன்கனிக்கோட்டை சாலையில் அருள்தந்தை லெக்ரான், MEP அவர்களின் முயற்சியால் நிலம் வாங்கப்பட்டது. அந்நிலத்தில் பள்ளிக்கான கட்டிடப் பணிகள் 29-10- 1985இல் துவங்கப்பட்டு பள்ளிக் கட்டிடம் 6-10-1986 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஆனந்த நகர் என்று அப்பகுதிக்கு பெயரிடப்ட்டது. மாணவர்களுக்கான விடுதி ஒன்று 1984 இல் ஆரம்பிக்கப்பட்டது. கிறிஸ்துபாளையத்தில் இயங்கி வந்த விடுதி, ஆனந்த நகரில் 1986 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. மாணவர் விடுதியின் கட்டிடம் 21-01-1999 கட்டி முடிக்கப்பட்டு 2000 ஜூன் முதல் இயங்க ஆரம்பித்தது. ஆனந்த நகரில் இன்று இயங்கும் பள்ளி, விடுதிகள் அனைத்தும் அருள்தந்தை லெக்ரான் அடிகளார் கிறிஸ்துபாளையத்திற்கு அளித்த பரிசாகும். ஆனந்த நகர் வளாகத்திலுள்ள நிறுவனங்கள் தந்தை லெக்ரானின் கனவில் வந்த நிஜங்கள். தந்தை லெக்ரான் அவர்களை நன்றியோடு நினைக்கிறோம்.

பள்ளியில் பணியாற்றிய தலைமையாசிரியர்கள்:

அருள்திரு. A. அமல்ராஜ் 1982-1988

அருள்திரு. A. அம்புரோஸ் 1988-1999

அருள்திரு. A. தாமஸ் 1999-2004

அருள்திரு. S. மைக்கேல்ராஜ் 2004-2009

அருள்திரு. ஸ்டீபன் 2009-2014

அருள்திரு. A. இருதயராஜ் 2014-2017

அருள்திரு. ஸ்டீபன் 2017-2020

அருள்திரு. K. லூர்துசாமி 2020 முதல்..

FSM சபை கன்னியர்கள்:

FSM சபை அருள்சகோதரிகள் கல்விப்பணியும், மருத்துவப் பணியும் செய்வதற்காக, 1990ஆம் ஆண்டு கிறிஸ்துபாளையம் வந்தனர். ஆசிரியர் குடியிருப்பில் தங்கி தங்கள் பணியைத் துவக்கினர். பின்னர் புதிதாக கட்டப்படட் கன்னியர் இல்லமான அருளகத்திற்கு 1991இல் குடியேறினர். 1994இல் மாணவியர் விடுதி, 2000ஆம் ஆண்டில் மருத்துவமனை என புதிய கட்டிடங்களை எழுப்பி அப்பகுதி மக்களுக்கு பணிசெய்து வருகின்றனர். (கட்டுரை அருள்திரு. A. சூசைராஜ்)

பங்கில் உள்ள கல்விக்கூடங்கள்: 

ஜான் பிரிட்டோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

புனித மரியாள் தொடக்கப்பள்ளி

பங்கில் உள்ள சபைகள்:

மரியாயின் சேனை

பாலர் இயக்கம்

பங்கில் உள்ள கெபி: 

தூய லூர்து அன்னை கெபி, ஆலய வளாகம்

முன்னாள் பங்குத்தந்தையர்களின் பெயர்கள் : 

1951 - 1952 அருள்திரு. சொல்வினா, MEP

1952 - 1955 அருள்திரு. கிரேவியர்

1955 - 1959 அருள்திரு. A.L. இருதயம் 

(கிறிஸ்துபாளையம், தாசரப்பள்ளியின் கிளைப்பங்காக இருந்தது)

1979 - 1980 அருள்திரு. A. பெலவேந்திரம்

1980 - 1985 அருள்திரு. லெக்ரான், MEP

1985 - அருள்திரு. ஜோனாஸ் கோப்பு 

1985 - 1989 அருள்திரு. லெக்ரான், MEP

1989-1992 அருள்திரு. இருதயசெல்வம்

1992-1994 அருள்திரு. S. அந்தோணிசாமி (கம்போடியா)

1994-1995 அருள்திரு. D.A. பிரான்சிஸ்

1995-1996 அருள்திரு. சேவியர் கடயான்குட்டி, V.C (பொறுப்பு)

1996-2002 அருள்திரு. P. லூர்துசாமி

2002-2003 அருள்திரு. A. தாமஸ்

2003-2005 அருள்திரு. M. ஜார்ஜ்

2005 2006 அருள்திரு. S. மைக்கேல்ராஜ்

2006-2007 அருள்திரு. A. ஜோசப்

2007-2008 அருள்திரு. மரியப்பன்

2008-2012 அருள்திரு. R. தோமினிக்ராஜா

2012-2014 அருள்திரு. J. ஆரோக்கியசாமி

2014- 2019 அருள்திரு. R. ஆரோக்கியசாமி

2019-2021 அருள்திரு. ஆரோக்கிய சவரியப்பன்

2021-2022 அருள்திரு. மரியப்பன்

2022 முதல் அருள்திரு. சிரில் பால்ராஜ்.

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. சிரில் பால்ராஜ் அவர்கள்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவி: திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி