புனித பாத்திமா மாதா ஆலயம்
இடம்: தெற்கு விஜய அச்சம்பாடு, நாங்குநேரி தாலுகா, இட்டமொழி அஞ்சல்
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: சாத்தான்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித ஜெபமாலை மாதா ஆலயம், மன்னார்புரம்
பங்குத்தந்தை அருள்பணி. எட்வர்ட்
குடும்பங்கள்: 17
திருப்பலி: தேவைக்கேற்ப
திருவிழா: மே மாதம் மூன்றாம் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு
வழித்தடம்: திருநெல்வேலி -மன்னார்புரம் -இட்டமொழி சாலையில், மன்னார்புரத்திலிருந்து 3கி.மீ தொலைவில் விஜய அச்சம்பாடு அமைந்துள்ளது.
Location map: https://maps.app.goo.gl/8WfVj1dwLBgYKoBdA
வரலாறு:
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சோமநாதபேரி பங்குத்தந்தையர்களின் மறைப்பணியால் தெற்கு விஜய அச்சம்பாட்டில் திரு. நல்ல ஆலோசனை மற்றும் அவரது உறவினர்களில் ஒருவர் கிறிஸ்தவம் தழுவினர்.
தெற்கு விஜய அச்சம்பாடு மக்களின் ஆன்மீகத் தேவைக்காக முதலில் 1950-ம் ஆண்டு மண்சுவர், ஓடு வேய்ந்த சிறிய ஆலயம் கட்டப்பட்டு, தூய ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தொடர்ந்து சோமநாதபேரி பங்கின் கீழ், தெற்கு விஜய அச்சம்பாடு செயல்பட்டு வந்தது. 1982-ம் ஆண்டு மன்னார்புரம் தனிப்பங்கானது முதல் தெற்கு விஜய அச்சம்பாடு ஆலயமானது, மன்னார்புரத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
பின்னர் 2001 ஆம் ஆண்டில், அருட்பணி. மைக்கேல் ஜெகதீஷ் பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் பழைய ஆலயம் அகற்றப்பட்டு, ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த புதிய ஆலயம் கட்டப்பட்டு, புனித பாத்திமா மாதாவின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டில், பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. ததேயுஸ் ராஜன் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
2003 ஆம் ஆண்டு முதல், மே மாதத்தில் 3 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக இவ்வூரைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் வெளியூர்களில் குடியேறி வாழ்ந்து வந்தாலும், திருவிழா மற்றும் முக்கிய விழா நாட்களில் அனைவரும் ஒன்றுகூடி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
ஆலய வரலாறு: தூத்துக்குடி மறைமாவட்ட இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. வின்சென்ட் அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: அருட்பணி. அருள்மணி அவர்கள்.