புனித ஆரோக்கியநாதர் ஆலயம்
இடம்: சீதப்பால்
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: கோட்டார்
மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்கு: புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தெள்ளாந்தி
பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் ராஜ் லெனின்
குடும்பங்கள்: 123
அன்பியங்கள்: 7
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி
திங்கள், வெள்ளி திருப்பலி காலை 06:00 மணி
புதன் மாலை 07:00 மணி நவநாள் திருப்பலி
சனி மாலை 07:00 மணி நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 07:00 மணி திருப்பலி நற்கருணை ஆராதனை
இரண்டாம் வெள்ளி மாலை 07:00 மணி திருப்பலி, புனித மிக்கேல் அதிதூதர் குருசடி
திருவிழா:
ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. டோனி ஜெரோம், கோட்டார் மறைமாவட்டம்
2. அருட்சகோதரி. மிக்கேலம்மாள் (late)
3. அருட்சகோதரி. கிளாரம்மாள் (late)
4. அருட்சகோதரி. மிக்கேல் செல்வி, SAT
5. அருட்சகோதரி. லீமா ரோஸ், St Ann's Italy
6. அருட்சகோதரி. மரிய இருதயம், திருஇருதய சபை
வழித்தடம்: நாகர்கோவில் -பூதப்பாண்டி -சீதப்பால்
Location map: https://g.co/kgs/1TLYUz
வரலாறு:
சீதப்பால் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்கு வாழும் அனைத்து இன மக்களும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற மனப்பாங்கோடு, அனைவரும் ஒன்றுபட்டு வாழ்கின்றனர்.
இயற்கை அன்னையின் செல்லக் குழந்தையாய், சுற்றிலும் கம்பீரமான மலையின் பாதுகாப்பில், எங்கும் வளம் கொழிக்கும் பசுமையான வயல்வெளிகள், சலசலக்கும் நீரோடைகள் மற்றும் குளங்கள், ஆறுகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு மிக்க இடம் தான், சீதப்பால் பங்கு.
பங்கில் சுமார் 1890களிலேயே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இங்கிருந்து அருகாமையில் உள்ள ஊர்களுக்கு திருப்பலிக்கு சென்று வந்ததாகவும், அக்காலத்தில் சீதப்பாலானது, பஞ்சவங்காட்டு புனித அந்தோனியார் ஆலயம் என அழைக்கப்படும், தற்போதைய குருசடி பங்கின் கிளைப்பங்காக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
25.07.1936 அன்று மார்த்தால் பங்காக உயர்த்தப்பட்டபோது, அருட்பணி. பிரான்சிஸ் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக இருந்தகாலம், மார்தாலின் கிளைப் பங்காக சீதப்பால் சிறப்புடன் செயல்பட்டது. அந்த காலத்தில் புனித ஆரோக்கியநாதர் சிறிய ஆலயம் ஒன்று இருந்தது. ஆலயத்தைச் சுற்றி இடம் கிடையாது. பின்பு பெரியவர்களின் முயற்சியால் ஆலயத்தின் முன்பு உள்ள இடங்கள் வாங்கப்பட்டன.
ஒரு சிறிய ஆலயத்தில் தான் மாதம் ஒருமுறை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது. அருட்பணி. கிறிஸ்து தாஸ் அவர்களால் 1968ஆம் ஆண்டு தூய மிக்கேல் அதிதூதர் குருசடி ஒன்று கட்டப்பட்டது.
1970ஆம் ஆண்டு அருட்பணி. பால் பாஸ்டியன் (யாழ்ப்பாணம்) அவர்களால் பழைய மேடை புதுப்பிக்கப்பட்டு, கட்டப்பட்டது. அதன்பின் அருட்பணி. மார்ட்டின் அலங்காரம் 1972ஆம் ஆண்டு காலத்தில் வாரம் தோறும் ஞாயிறு காலையில் திருப்பலி நடைபெற்றது. 1978ஆம் ஆண்டு அருட்பணி. அருளப்பன் அவர்களால் பீடம் மாற்றி அமைக்கப்பட்டு, மக்களைப் பார்த்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஒலிபெருக்கியும் வைக்கப்பட்டது.
தொடர்ந்து அருட்பணி. ஜோசப் அவர்கள் மார்த்தால் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சீதப்பாலில் மக்களின் ஒத்துழைப்போடு, புனித மிக்கேல் அதிதூதர் குருசடி இருந்த இடத்தில் புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு கட்டப்பட்டது. 14.04.1986 அன்று அருட்பணி. சூசைமரியான், மறைமாவட்ட குருகுல முதல்வர் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. பழைய ஆலயம் இருந்த இடத்தில் புதிய கொடி மரம் கட்டப்பட்டது. அருட்பணி. P. K. செல்லையன் அவர்களால், 1993ஆம் ஆண்டு பங்கு அருட்பணிப் பேரவை உருவாக முயற்சிகள் மேற்கொண்டு அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் அவர்களால் அப்பேரவை சிறப்புடன் உருவாக்கப்பட்டது.
அருட்பணி. பெர்பெய்ச்சுவல் அவர்களின் முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் 12.08.2003 அன்று சீதப்பால் தனிப்பங்கானது. அருட்பணி. அந்தோணியப்பன் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்புடன் செயல்பட்டார்கள். அத்தருணம் 4 சென்ட் வாங்கி அருட்பணியாளர் இல்லம் கட்டப்பட்டு, மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணி. பென்சிகர் அவர்களின் காலத்தில் 2006ஆம் ஆண்டு, ஆரல்வாய்மொழி சாலையில் புனித அதிதூதர் குருசடிக்கான இடம் 38 சென்ட், புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தின் அருகே 5 சென்ட் இடமும் வாங்கப்பட்டது.
அருட்பணி. கில்பர்ட் லிங்சன் காலத்தில் 2012ஆம் ஆண்டு புனித மிக்கேல் அதிதூதர் சுரூபம் வைக்கப்பட்டு, இன்று வரை மக்கள் மாலையில் அவ்விடத்தில் சேர்ந்து செபித்து வருகின்றனர். ஆலயத்தின் கலையரங்கத்தின் பின்னால் 2 சென்ட் இடம் வாங்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு அருட்பணி. கிறிஸ்டோ டாபின் காலத்தில் அன்புறவு குடில் கட்டப்பட்டது. 2018ஆம் ஆண்டு புனித மிக்கேல் அதிதூதர் குருசடி பெரிதாக்கப்பட்டு, மாதத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை மாலையில் திருப்பலியும் நடைபெறுகிறது. புதிய கல்லறைத் தோட்டத்திற்கான இடம் 20 சென்ட் வாங்கப்பட்டது. ஆலயத்தின் முன்னால் அலங்கார கற்கள் போடப்பட்டன.
சீதப்பாலில் முதல் மண்ணின் அருட்பணியாளராக அருட்பணி. டோனி ஜெரோமின் குருப்பட்ட விழா கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் வைத்து 2018 ஏப்ரல் மாதம் 8ஆம் நாள் நடைபெற்றது. அவருடைய நன்றித்திருப்பலி சீதப்பால் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் 12.04.2018 அன்று மாலையில் நடைபெற்றது. இதில் பல சமய தலைவர்களும் மக்களும் பங்கு பெற்றனர்.
2019ஆம் ஆண்டு அருட்பணி. ரெஞ்சித்குமார் அவர்களால் புதிய பீடம் மர வேலைப்பாடுகளுடன் புதுப்பிக்கப்பட்டு, மாதாவுக்கு புதிய பெரிய தேர் ஒன்றும் செய்யப்பட்டது.
புனித ஆரோக்கியநாதரின் பரிந்துரையால், இறைவனின் ஆசியுடன் சீதப்பால் மக்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள்:
1. திருவழிபாட்டுக் குழு
2. பீடச்சிறார்
3. பாடகற்குழு
4. புனித ஆரோக்கியநாதர் மறைக்கல்வி மன்றம்
5. பாலர் சபை &சிறுவழி இயக்கம்
6. இளம் கத்தோலிக்க மாணாக்கர் இயக்கம்
7. புனித ஆரோக்கியநாதர் இளையோர் இயக்கம்
8. கிறிஸ்தவம் வாழ்வு சமூகம்
9. கத்தோலிக்க சேவா சங்கம்
10. புனித வின்சென்ட் தே பவுல் சபை
11. கத்தோலிக்க தொழிலாளர் இயக்கம்
12. அன்பிய ஒருங்கிணையம்
13. பங்குப் பேரவை
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. அந்தோனியப்பன் (12.08.2003 -04.11.2005)
2. அருட்பணி. பென்சிகர் (04.11.2005 -16.05.2010)
3. அருட்பணி. கில்பர்ட் லிங்சன் (16.05.2010 -07.02.2023)
4. அருட்பணி. கிறிஸ்டோ டாபின் (07.02.2013 -05.05.2018)
5. அருட்பணி. ரெஞ்சித்குமார் (05.05.2018 -20.05.2023)
6. அருட்பணி. ஜோசப் ராஜ் லெனின் (20.05.2023...)
தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. ஜோசப் ராஜ் லெனின் அவர்கள்
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவி: ஆலய உறுப்பினர் திரு. ஜான் போஸ்கோ அவர்கள்.
கூடுதல் புகைப்படங்கள்: மண்ணின் மைந்தர் அருட்பணி. டோனி ஜெரோம் அவர்கள்.