புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: திட்டுவிளை
முகவரி: புனித அந்தோனியார் ஆலயம், திட்டுவிளை, பூதப்பாண்டி அஞ்சல், குமரி மாவட்டம், 629852
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: கோட்டார்
மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்
நிலை: பங்குத்தளம்
மறைபரப்பு மையம்: தூய ஜெபமாலை அன்னை ஆலயம், திடல்
பங்குத்தந்தை அருள்பணி. J. செல்வராஜ்
Mob: +91 94895 54444
குடும்பங்கள்: 107
அன்பியங்கள்: 4
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 07:30 மணி திருப்பலி
செவ்வாய் மாலை 06:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
புதன், சனி காலை 06:30 மணி திருப்பலி
வெள்ளி மாலை 06:00 மணி திருப்பலி
திருவிழா: திருநீற்றுப் புதனுக்கு முந்தைய ஞாயிறு நிறைவடையும் வண்ணம் 10 நாட்கள்
மண்ணின் இறையழைத்தல்:
அருட்பணி. P. பென்சிகர், கோட்டார் மறைமாவட்டம்
வழித்தடம் : நாகர்கோவிலிலிருந்து: 4A, 4B, 4C போன்ற எல்லா 4 route buses
Map location: St. Anthony's Church
https://maps.google.com/?cid=7296810876553266536&entry=gps
வரலாறு:
மீன்தொழில் செய்து வந்த திட்டுவிளையில் வாழ்ந்த முன்னோர், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குருசடி கட்டியெழுப்பி, அதில் புனித அந்தோனியார் சுரூபம் வைத்து, செபமாலை சொல்லியும், இறைவனை வழிபட்டும் வந்துள்ளனர்.
கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் மறைப்பரப்புக்காக இந்த பகுதியில் பல அருட்பணியாளர்கள் வந்து மக்களைச் சந்தித்து, மறைக்கல்வி சொல்லிக் கொடுத்தும் நாளடைவில் திருப்பலி நடைபெறுகின்ற அளவுக்கு கத்தோலிக்க விசுவாசிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. பின்னர் திட்டுவிளையானது சிற்றாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு,
நாகர்கோவில் குருசடி (பஞ்சவங்காடு) பங்கின் கீழ் செயல்பட்டு வந்தது.
1936 ஆம் ஆண்டில் மார்த்தால் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயமானது தனிப்பங்கானது முதல் திட்டுவிளையானது, மார்த்தாலின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் பரிந்துரையால் ஏராளமான புதுமைகளையும், நன்மைகளையும் திட்டுவிளை இறைமக்கள் பெற்றுக் கொண்டனர். இதன் காரணமாக மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, புனித அந்தோனியார் குருசடி இருந்த இடத்தில் 20.02.1987 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கிய சாமி அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
திட்டுவிளை இறைமக்களின் ஒத்துழைப்பு, நிதி பங்களிப்பு மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் மார்த்தால் பங்குத்தந்தையர் அருட்பணி. S. ஜோசப் (1982-1990), அருட்பணி. P. K. செல்லையன் (1990-1993) ஆகியோரின் வழிகாட்டலில் ஆலயம் கட்டப்பட்டு, 14.02.1992 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
ஆலய பீடமானது சீரமைக்கப்பட்டு 12.04.2013 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
மார்த்தால் பங்கிலிருந்து பிரிந்து, மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் 12.02.2021 அன்றுதிட்டுவிளை தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. A. சஜூ அவர்கள் பணிப் பொறுப்பேற்று நடத்தினார்.
பங்கின் இரண்டாவது பங்குத்தந்தையாக அருட்பணி. J. செல்வராஜ் அவர்கள், 22.05.2023 அன்று பொறுப்பேற்று, திட்டுவிளை பங்கினை சிறப்புற வழிநடத்தி வருகின்றார்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. மறைக்கல்வி
2. இளைஞர் இயக்கம்
3. கிறிஸ்தவ வாழ்வு இயக்கம்
4. அன்பிய ஒருங்கிணையம்
5. பங்குபேரவை
6. வழிபாட்டுக்குழு
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. J. செல்வராஜ் அவர்கள்.