953 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், எருத்தேன்பதி

        


புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம்

இடம்: எருத்தேன்பதி

முகவரி: புனித இராயப்பர் புனித சின்னப்பர் ஆலயம், எருத்தேன்பதி, கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, கேரளா, எருத்தேன்பதி அஞ்சல், சுல்தான்பேட்டை மறைமாவட்டம். Pin 678555

மாநிலம்: கேரளா

மாவட்டம்: பாலக்காடு

மறைமாவட்டம்: சுல்தான்பேட்டை

மறைவட்டம்: பழனியார்பாளையம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித சந்தியாகப்பர் ஆலயம், குலுக்குப்பாறை

பங்குத்தந்தை அருட்பணி. A. ஆல்பர்ட் ஆனந்தராஜ்

கைப்பேசி எண்: +91 98469 41219

குடும்பங்கள்: 490

அன்பியங்கள்: 19

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:30 மற்றும் காலை 08:30 மணி

காலை 07:00 மணி திருப்பலி (குலுக்குப்பாறை)

நாள்தோறும் திருப்பலி காலை 06:30 மணி

வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணி இறை இரக்க நவநாள் திருப்பலி

சனிக்கிழமை கருமண் மரிய மதலேனாள் திருத்தலத்தில்: காலை 10:30 மணி மரிய மதலேனாள் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், வேண்டுதல் உணவு.

திருவிழா: ஜனவரி மாதம் 23, 24, 25.

ஜூலை 22 ஆம் தேதி கருமண் மரிய மதலேனாள் திருத்தல திருவிழா

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி.‌ மிக்கேல், கோவை மறைமாவட்டம்

2. அருட்பணி. ஜாஸ்மின் நெல்சன், சுல்தான்பேட்டை மறைமாவட்டம்

3. அருட்பணி. நெல்சன் ஜாய் ஆன்டனி, சுல்தான்பேட்டை மறைமாவட்டம்

4. அருட்பணி. பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், MSFS

வழித்தடம்: பொள்ளாச்சி -கொழிஞ்சாம்பாறை 

பாலக்காடு -கொழிஞ்சாம்பாறை

கொழிஞ்சாம்பாறையிலிருந்து 4கி.மீ தொலைவில் எருத்தேன்பதி அமைந்துள்ளது.

Location map:

https://g.co/kgs/q6o1Ky

பங்கின் வரலாறு:

1820 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திண்டுக்கல்லில் இருந்து வந்த மக்களில், 25 பேர் எருத்தேன்பதிக்கு வந்து குடியேறினர்.  

1839 ஆம் ஆண்டில் திரு. சவரி என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில், இந்த மக்களின் ஆன்மீகத் தேவைக்காக தொடக்கத்தில் புனித இராயப்பர் சின்னப்பர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமானது 

கட்டப்பட்டது.  

எருத்தேன்பதி 1894 இல் பங்காக ஆனது.  பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ரிவியரா, MEP அவர்கள்  நியமிக்கப்பட்டார்.

1941 ஆம் ஆண்டிலேயே மறைமாவட்டத்தால் கட்டப்பட்ட தொடக்கப் பள்ளி இருந்தது. இப்போது கோயம்புத்தூர் காணிக்கை அன்னை சபை அருட்சகோதரிகள் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அருட்பணி. ரெஜிஸ் அவர்கள் கோவையைச் சேர்ந்த காணிக்கை அன்னை சபை சகோதரிகளை 1957 ஆம் ஆண்டு பள்ளியில் பணிபுரிய அழைத்து வந்ததால், பள்ளி நிர்வாகம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1949 ஆம் ஆண்டு ஆலயம் விரிவுபடுத்தப்பட்டு, பலிபீடமும் அழகுற புதுப்பிக்கப்பட்டது. தூய லூர்து அன்னையின் கெபி 1954 இல் கட்டப்பட்டது. வில்லூனி செல்லும் சாலையில் (கிராமத்திற்கு வெளியே) பங்கு மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 10 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு லூர்து மாதாவின் கெபி கட்டப்பட்டது. அருட்பணி. பயஸ் சவரிமுத்து 1983 ஆம் ஆண்டு வில்லூனியில் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தைக் கட்டினார்.  

எருத்தேன்பதி ஆலய மணிக்கூண்டு 1985ம் ஆண்டு கட்டப்பட்டது.  

அருட்பணி. ஜான் ஜோசப் ஸ்தனிஸ்லாஸ் அவர்களின் வழிகாட்டலில், எருத்தேன்பதி இறைமக்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவியுடன் தற்போதைய புதிய ஆலயம், கெபிகள் மற்றும் ஒரு மணிக்கூண்டு ஆகியன கட்டப்பட்டு, அப்போதைய கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு அம்புரோஸ் அவர்களால் 23.01.2002 அன்று  அர்ச்சிக்கப்பட்டது.  

அருட்பணி. எட்வர்ட் (2002-2005) அவர்கள் புதிதாக பங்குத்தந்தை இல்லத்தையும், வில்லூனியில் வேளாங்கண்ணி அன்னையின் புதிய கெபியையும் அவரது பணிக்காலத்தில் கட்டினார்.

அருட்பணி. செல்வராஜ் அவர்கள், வில்லூனி மறைப்பரப்பு தளத்தின், வெள்ளிவிழா நினைவாக அங்குள்ள ஆலயத்தை புதுப்பித்தார்.

அருட்பணி. எம். பால் பணிக்காலத்தில், கருமண் சாலையோரத்தில் புனித மதலேன் மரியாள் திருத்தலப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, அருட்பணி. சுந்தர் ராஜ் பணிக்காலத்தில் நிறைவு பெற்று, சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனி சாமி பீட்டர் அபீர் அவர்களால் 08.02.2020 அன்று அர்ச்சிக்கப்பட்டது.  

மேலும் அருட்பணி. எம். பால் பணிக்காலத்தில் எருத்தேன்பதியில் 15 (BCC) அன்பியங்களையும், மறைபரப்பு தளமாகிய வில்லூனியில் 6 (BCC) அன்பியங்களையும் உருவாக்கினார். மேலும் ஆலய வளாகத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தை புதுப்பித்து, அது இப்போது SMSSS அலுவலகத்தை நடத்துவதற்கும், தேர் வைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கிளைப்பங்கான துலுக்குப்பாறை ஆலயத்தை புதுப்பித்தார்.

வில்லூனி, மறைபரப்பு தளமானது எருத்தேன்பதி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, ஜூன் 1, 2016 அன்று புதிய பங்காக உயர்த்தப்பட்டது. அருட்பணி.  லாசர் அருளப்பன் அவர்கள், வில்லூனியின் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

ஆலயத்தின் எதிர்ப்புறம் உள்ள இராயப்பர் பள்ளிக்கூடத்தின் பழைய கட்டிடத்தின் ஒரு பகுதி, அருட்பணி. ஆல்பர்ட் ஆனந்தராஜ் அவர்களால் 2022 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு, திருமண நிகழ்வுகளுக்கும் மற்றும் பங்கின் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப் படுகிறது.

ஆலயத்தைச் சுற்றிலும் பேவர் பிளாக் போடப்பட்டு, ஆலயமும் புனரமைக்கப்பட்டு, ஆலய வளாகம் அழகூட்டப்பட்டதுடன், புதிய கொடிமரமும் வைக்கப்பட்டு 22.01.2023 அன்று மேதகு ஆயர் அந்தோனி சாமி பீட்டர் அபீர் அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

கருமண்ணில் 2021 ஆம் ஆண்டு முதல், மரிய மதலேனாள் நவநாள் துவக்கப்பட்டு, ஏராளமான இறைமக்கள் இந்த நவநாளில் பங்கேற்று நிறைவான ஆசீர்வாதங்களையும், அற்புதங்களையும் பெற்றுச் செல்கின்றனர். கருமண்ணில் 8 சென்ட் நிலம் 2023 ஏப்ரல் மாதத்தில் வாங்கப்பட்டது. 

தேர்த்திருவிழா:

ஜூன் மாதம் 29-ம் தேதி புனித இராயப்பர் சின்னப்பர் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

பங்கேற்பு அமைப்புகள்:

1. கோல்பிங் இயக்கம்

2. பீடச்சிறுவர்

3. மரியாயின் சேனை

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. இளைஞர் இயக்கம்

6. பாடகற்குழு 

பங்கின் கெபி:

1. தூய லூர்து மாதா கெபி (மலைக்கோயில்) 

2. புனித வனத்து சின்னப்பர் கெபி

3. புனித சந்தியாகப்பர் கெபி

பங்கின் திருத்தலம்:

புனித மதலேன் மரியாள் திருத்தலம், கருமண்

பங்கின் பள்ளிக்கூடம்:

புனித இராயப்பர் நடுநிலைப் பள்ளி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Fr. Riviera (1894-1897)

2. Fr. Sibuiet (1897-1927)

3. Fr. Jambou (1906-1908)

4. Fr. A. Dominic (1914-1918)

5. Fr. Lazarus (1918-1923)

6. Fr. S. Arul (1923-1925)

7. Fr. L. Xavier (1925)

8. Fr. D. M. Antony (1925-1929)

9. Fr. M. S. Michael (1929-1938)

10. Fr. Abraham Valiaparambil (1938-1947)

11. Fr. R. Sathanantham (1947-1948)

12. Fr. Thomas Erathanad (1948-1950)

13. Fr. Lazarus (1950-1954)

14. Fr. Regis (1954-1960)

15. Fr. G. M. Kunnath (1960-1972)

16. Fr. A. Chinnasamy (1972-1974)

17. Fr. George (1974-1975)

18. Fr. S. Maria Nathar (1975-1978)

19. Fr. A. Pius Savarimuthu (1978-1983)

20. Fr. C. S. Madalaimuthu (1983-1984)

21. Fr. Paulraj Vincent (1984-1991)

22. Fr. L. Kanagaraj (1991-1995)

23. Fr. Simon Peter (1995-1997)

24. Fr. John Joseph Stanis (1997-2002)

25. Fr. Edward (2002-2005)

26. Fr. I. Jacob (2005-2008)

27. Fr. Antony Selvaraj (2008-2011)

28. Fr. Lazer Arulappan (2011-2015)

29. Fr. M. Paul (2015-2019)

30. Fr. Ales Sundarraj (2019-2021)

31. Fr. Albert Anandraj (2021----)

எருத்தேன்பதி பங்கு மற்றும் கருமண் திருத்தலம் ஆகியவற்றில் பல்வேறு புதுமைகள் நடந்து வருகிறது. குறிப்பாக புற்றுநோயாளர் நலம் பெற்றுள்ளனர். குழந்தை பாக்கியம், திருமண வரன், பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை என புதுமைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.. உங்களது வேண்டுதலுக்கும் இறைவன் செவிசாய்ப்பார் வாருங்கள்..

தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. ஆல்பர்ட் ஆனந்தராஜ் அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் டென்னிஸ் ஜான்சன் அவர்கள்.