புனித பாத்திமா மாதா ஆலயம்
இடம்: சன்னாபுரம், திருநாகேஸ்வரம், கும்பகோணம் தாலுகா, 612204
மாவட்டம்: தஞ்சாவூர்
மறைமாவட்டம்: கும்பகோணம்
மறைவட்டம்: கும்பகோணம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித அலங்கார அன்னை பேராலயம், கும்பகோணம்
பங்குத்தந்தை பேரருட்பணி. பிலோமின் தாஸ் (மறைமாவட்ட முதன்மை குரு)
குடும்பங்கள்: 40
அன்பியங்கள்: 2
பாத்திமா மாதா அன்பியம்
அந்தோனியார் அன்பியம்
சனிக்கிழமை மாலை 07:00 மணி திருப்பலி
திருவிழா: மே மாதம் 13&14
வழித்தடம்: கும்பகோணம் -திருநாகேஸ்வரம் -சன்னாபுரம்
தடம் எண் 22 பேருந்துகள், இளந்தென்றல் மினி பேருந்து. இறங்குமிடம் சன்னாபுரம் மாதா கோயில்.
Location map:
வரலாறு:
மதுரைக்கு அருகே கோண்டாகுறிச்சி ஊரைச் சேர்ந்த மக்கள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் சன்னாபுரம் வந்து, இப்பகுதியில் வாழ்ந்த மக்களுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டு, விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். பின்னர் நிலம் வாங்கி இங்கேயே வாழ்ந்து வந்தனர்.
நான்கு தலைமுறை பாரம்பரியம் மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழும் சன்னாபுரத்தில் தொடக்கத்தில் சீமை ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டது. அதன் பின்னர் மூன்றாவது ஆலயமானது கட்டப்பட்டது. கும்பகோணம் பேராலய பங்குத்தந்தையர் இம்மக்களை வழிநடத்தி வந்தனர்.
தற்போது காணப்படும் கான்கிரீட் ஆலயமானது, நான்காவது ஆலயமாகும். இந்த ஆலய கட்டுமானப் பணியின் போது சன்னாபுரம் இறைமக்கள் அனைவரும் வேலை செய்து கொடுத்தனர். ஆலயமானது 06.06.2003 அன்று கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
பத்து வருடங்களுக்கு முன்னர் 2010-12 காலகட்டத்தில் திருச்சிலுவையிலிருந்த இயேசுவின் கண்களில் இருந்து தண்ணீர் வடிந்த புதுமையை, குழந்தைகள் முதலில் கண்டு, பெரியவர்களிடம் தெரிவித்தனர். உடனே ஊரில் உள்ள மக்கள் அனைவரும் வந்து இந்த அற்புதத்தைக் கண்டு, இறைவனின் மகத்துவத்தை அறிந்து மெய்சிலிர்க்க நன்றி கூறினர்.
50 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, அதில் தற்போது தென்னை மரங்கள் வைக்கப்பட்டு பராமரித்து வருகின்றனர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. அருள்ராஜ் நாட்டார்.