960 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மன்னார்புரம்

     


புனித ஜெபமாலை அன்னை ஆலயம்

இடம்: மன்னார்புரம்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. இயேசுவின் திருஇருதய ஆலய சிவந்தியாபுரம்

2. தூய லூர்து மாதா ஆலயம், அழகப்பபுரம்

3. புனித அந்தோனியார் ஆலயம், அழகப்பபுரம்

4. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், சங்கனான்குளம்

5. புனித பாத்திமா மாதா ஆலயம், தெற்கு விஜய அச்சம்பாடு

6. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், விஜய அச்சம்பாடு 

7. புனித தோமையார் ஆலயம், தெற்கு விஜயநாராயணம்

8. புனித சந்தியாகப்பர் ஆலயம், பெரும்பனை

பங்குத்தந்தை அருட்பணி. J. எட்வர்ட்

குடும்பங்கள்: 280+

அன்பியங்கள்: 12

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 05:30 மணி

வியாழன் மாலை 07:00 மணி குழந்தை இயேசு நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 07:00 மணி ஜெபமாலை மாதா பக்தி முயற்சி

தூய ஆரோக்கிய அன்னை கெபியில் மாதத்தின் இரண்டு சனிக்கிழமை மாலையில் திருப்பலி நடைபெறும்.

பங்குத் திருவிழா: அக்டோபர் மாதம் 07-ம் தேதி நிறைவு பெறுகின்ற வகையில் பத்து நாட்கள் நடைபெறும்.

லூர்து மாதா கெபி திருவிழா: பிப்ரவரி மாதம் 9,10,11 தேதிகளில் திருவிழா.

ஆரோக்கிய அன்னை கெபி திருவிழா: ஜனவரி மாதம் 17-ம் தேதி நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்தந்தையர்கள்:

1. அருட்தந்தை. அருள்ராயர். சே.ச (late)

2. அருட்தந்தை. ஜான் பெனிற்றோ

3. அருட்தந்தை. ரெபோனி ஆசீர்

4. அருட்தந்தை. கலைச்செல்வன்

அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. (பெயர் கிடைக்கவில்லை) SAT (late)

2. அருட்சகோதரி. எமரிக், SAT (late)

3. அருட்சகோதரி. மரிய அந்தோணி பெலிக்ஸ், SAT (late)

4. அருட்சகோதரி. மேரி ஜோஸ்பின் SAT

5. அருட்சகோதரி. சார்லஸ் இராஜம், SAT

6. அருட்சகோதரி. நம்பிக்கை ரோஸ், SAT

7. அருட்சகோதரி. ஜெயா லூயிஸ் மேரி,  SAT

8. அருட்சகோதரி. சாந்தா மேரி ஜோஷிற்றா, SAT

9. அருட்சகோதரி. சில்வெஸ்டர் ஜெய சவரினாள், SAT

10. அருட்சகோதரி. எமரால்டு ஜெய பிரின்ஸஸ், SAT

11. அருட்சகோதரி. ஜீசஸ் சுமதி, SAT

12. அருட்சகோதரி. பனிமேரி (பனிமயம்), SAT

13. அருட்சகோதரி. மரிய ஜெபமாலை, ரொசரியன் சபை (late)

14. அருட்சகோதரி. அல்போன்சா (ஜெம்மா), அடைபட்ட கார்மேல் சபை

15. அருட்சகோதரி. மரிய டிலக்டா (இராணி), Little Sisters of the Poor

வழித்தடம்: நாகர்கோவில் -திருச்செந்தூர் சாலையில், வள்ளியூர் வழித்தடத்தில் மன்னார்புரம் அமைந்துள்ளது.

Location map: Our Lady of Rosary Church - Mannarpuram

https://maps.app.goo.gl/eJhtg3Pd2Ce99AkY8

வரலாறு:

மன்னார்புரத்தின் கிழக்குப் பகுதியில்  உள்ளூர் நில உரிமையாளர்களின் பண்ணைகளில் உள்ள பனைமரங்களில் ஏறி பணிபுரிய, திருநெல்வேலி மாவட்டத்தின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த சில கிறிஸ்தவக் குடும்பங்கள் 1910-களில் மன்னார்புரத்திற்கு வந்தனர். இப்பகுதியில் ஆதிகாலத் தமிழர்கள் இப்பண்ணை நிலங்களில் வேலை செய்து வந்தனர். காலப்போக்கில், ஆதிகாலத் தமிழர்கள் வேறு இடங்களுக்குச் சென்றனர்.  மன்னார்புரத்தில் பனைமரம் ஏறி வாழ்ந்து வந்த மக்கள், அணைக்கரை மிஷன் குருக்களால் கத்தோலிக்கம் தழுவினர். இவர்களின் ஆன்மீகத் தேவைக்காக ஓலைக் குடிசையில் தூய ஜெபமாலை அன்னை ஆலயம் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 1927ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்து ஜெபமாலை அன்னையின் சுரூபம்  கொண்டுவரப்பட்டு ஆலயத்தில் நிறுவப்பட்டது.

நாளடைவில், இறைமக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ஓலைக் குடிசை ஆலயம் மிகச்சிறியதாக இருந்ததாலும், சுண்ணாம்புச் சுவர்களைக் கொண்ட ஒரு ஆலயத்தைக் கட்ட முடிவுசெய்து, அதற்காக புதிய நிலத்தை வாங்கி 1935 ஆம் ஆண்டு அணைக்கரை பங்குத்தந்தை அருட்பணி. ராஜா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு,  1949 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு திபுர்சியுஸ் ரோச் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.  

1953 ஆம் ஆண்டில், பனைமரத்தாலான மணிக்கோபுரம் அமைக்கப்பட்டு, அதில்  ‘மரியா’ எனப் பெயரிடப்பட்ட மணி ஒன்று பொருத்தப்பட்டது.

1971 இல், தேவாலயத்தின் முகப்பு கட்டப்பட்டது. அருட்பணி. செட்ரிக் பீரிஸ் அவர்கள் அணைக்கரையின்  பங்குத்தந்தையாக இருந்த போது, அணைக்கரையிலிருந்து பிரிந்து, 1982 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மன்னார்புரம் புதிய பங்காக நிறுவப்பட்டது. அருட்பணி. ஜோசப் அமல்ராஜ் (1982-1984) அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.

மன்னார்புரம் பங்கானதன் முதலாவது ஆண்டு நினைவாக, அருட்பணி. ஜோசப் அமல்ராஜ் அவர்களின் வழிகாட்டலில்

மன்னார்புரம் சந்திப்பில் தூய ஆரோக்கிய மாதா கெபி கட்டப்பட்டு, 17.01.1983 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. ராஜா போஸ் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய முன்புற மண்டபம் (போர்டிகோ) கட்டினார்.  

அருட்பணி. ஜெய ஜோதி அவர்கள் பங்குதந்தை இல்லத்தை புதுப்பித்தார்.  

இவரது பணிக்காலத்தில் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் இருந்த, உயர்நிலைப் பள்ளி திருச்சி புனித அன்னாள் சபையினருக்கு கொடுக்கப்பட்டது.  

அருட்பணி. ஜேசு வில்லியம் அவர்கள், 1953 ஆம் ஆண்டு முதல், ஓடு வேயப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வந்த செயின்ட் மேரிஸ் ஆரம்பப் பள்ளியை மீண்டும் கட்டினார். கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக ஒரு மேடையையும் கட்டினார். இவரது பணிக்காலத்தில் குடிசைகள் அனைத்தும் ஓடு வேய்ந்த கூரை வீடுகளாக மாற்றப்பட்டது சிறப்புக்குரியது.  

அருட்பணி. மைக்கேல் ஜெகதீஷ் பணிக்காலத்தில் வேளாங்கண்ணி மாதா கெபியில் புதிய கொடிமரத்தை நிறுவி, 10 நாட்கள் அன்னையின் திருவிழாவைக் கொண்டாடி, அன்னையின் புகழை பரவச் செய்தார்.  

அருட்பணி. ததேயுஸ் அவர்கள் அழகப்பபுரத்தில் லூர்து அன்னை ஆலயத்தைக் கட்டினார். வடக்கு விஜய அச்சம்பாடு புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தைப் புதுப்பித்தார். வடக்கு அச்சம்பாட்டில் உள்ள பாத்திமா மாதா ஆலயத்தையும் புதுப்பித்தார்.

அருட்பணி. அருள்மணி பணிக்காலத்தில் தற்போது உள்ள மயானத்தை ஒட்டிய நிலம் ஒன்று விளையாட்டு மைதானத்திற்காக வாங்கப்பட்டது. மறைமாவட்ட நிலத்திற்கான வழிப்பாதை வாங்கப்பட்டது. முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. ஜேசு வில்லியம் அவர்கள் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட நியாயவிலைக்கடை மற்றும் கிளை அஞ்சலகத்திற்கான கட்டிடம் அருள்பணி அருள்மணி அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது. முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. ததேயுஸ் அவர்கள் கிளையூர் ஆலயத்திற்காக வெளி நாட்டில் விண்ணப்பித்திருந்த பணத்தின் மீதம், இக்கட்டிடப் பணிக்கு மிகவும் உதவியாக இருந்தது.

மன்னார்புரம் சந்திப்பில் நான்கு கடைகளுக்கான கட்டிடம் கட்டப்பட்டது.  பங்குப் பேரவை 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

ஒரு C.S.I கிறிஸ்தவ அன்பரின் நன்கொடையில் லூர்து அன்னையின் கெபி கட்டப்பட்டது. 

அருட்பணி. ஜெரால்ட் குரூஸ் அவர்களின் வழிகாட்டலில் புதிய கொடிமரம் நிறுவப்பட்டதுடன், சந்திப்பில் உள்ள வேளாங்கண்ணி மாதா கெபிக்குப் பின்னால் அசன மடம் கட்டப்பட்டது. அருட்பணி. ஜார்ஜ் ஆலிபன் முயற்சியால் கெபியில், லூர்து மாதாவின் சுரூபம் நிறுவப்பட்டது.  

அருட்பணி. சூசை ராஜா வழிகாட்டலில் செயின்ட் மேரிஸ் ஆரம்பப் பள்ளிக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டது.  

அருட்பணி. சகாயராஜ் வல்தாரிஸ் முயற்சியால் சந்திப்பில் ஏழு கடைகளுக்கான கட்டிடம் கட்டப்பட்டது. பங்கு ஆலயத்தில் மற்றும் மண்டபத்தின் தரைக்கு கிரானைட் பதிக்கப்பட்டது. பங்கு ஆலய உட்புறம் மற்றும் வெளிப்புறம் அழகூட்டப்பட்டது. மேலும் சந்திப்பில் உள்ள கெபியில் விரிவாக்கப் பணிகளைச் செய்தார். அழகப்பபுரத்தில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியை புதுப்பித்தார்.  

தற்போது பங்குத்தந்தையாக பணியாற்றி வரும் அருட்பணி. எட்வர்ட் அவர்கள், சந்திப்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாதா திருமண மண்டபப் பணிகளை மேற்கொள்கிறார். தென்மண்டல பணிக்குழுக்களின் தலைமையகத்திற்கு ஆதரவாக திருச்சபை நிலத்தை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுத்து, தென்மண்டல பணிக்குழுக்களின் மையத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். குடிநீர் திட்டத்திற்கான (V.M.S.S.S) ஆலை ஆலய வளாகத்தில்  நிறுவப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. நற்கருணை வீரர் சபை

2. சூசையப்பர் சபை

3. அமலோற்பவ மாதா சபை

5. திருக்குடும்ப சபை

6. தொன்போஸ்கோ இளைஞர் இயக்கம் 

7. மரியாயின் சேனை

8. பாலர் சபை

9. பீடச்சிறார்

10. பாடகற்குழு

11. பங்குப்பேரவை

பங்கின் கல்வி நிறுவனங்கள்:

செயின்ட் மேரீஸ் தொடக்கப்பள்ளி 

செயின்ட் மேரீஸ் உயர்நிலைப்பள்ளி (SAT Congregation Sisters)

துறவற இல்லம்:

திருச்சி புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் (SAT)

பங்கின் கெபிகள்:

தூய ஆரோக்கிய அன்னை கெபி

தூய லூர்து அன்னை கெபி.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev.Fr. Joseph Amalraj (1982-1984)

2. Rev.Fr. Raja Boss (1984-1887)

3. Rev.Fr. Jeya Jothi (1987-1991)

4. Rev.Fr. Jesu William (1991-1996)

5. Rev.Fr. James Selvaraj (1996-1997)

6. Rev.Fr. Michael Jegadesh (1997-2001)

7. Rev.Fr. Thadeus (2001-2003)

8. Rev.Fr. Arul Mani (2003-2008)

9. Rev.Fr. Jerald Gruz (2008-2010)

10. Rev.Fr. Aliban (2010-2012)

11. Rev.Fr. Soosai Raja (2012-2017)

12. Rev.Fr. Sahayaraj Valdharis D. (2017-2021)

13. Rev.Fr. Edward J. (2021--)

தகவல்கள்: திரு. ஜஸ்டின் ஆசிரியர் 

ஆலயம் வரலாறு மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. எட்வர்ட் அவர்களின் அனுமதியுடன், முன்னாள் பங்குதந்தை அருட்பணி.‌ அருள்மணி அவர்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள் தகவல்கள்:  அருட்பணி. ஜான் பெனிட்டோ, அருட்பணி. ரெபோனி ஆசீர் மற்றும் அருட்சகோதரி. சாந்தா மேரி ஜோஷிற்றா ஆகியோர்.