967 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், முதல்சேரி

       


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம்: முதல்சேரி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - 614602.

மறைமாவட்டம்: தஞ்சாவூர்

மறைவட்டம்: பட்டுக்கோட்டை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: உலக இரட்சகர் ஆலயம், பட்டுக்கோட்டை

பங்குத்தந்தை அருட்பணி. J. அந்தோணி சாமி

உதவி பங்குத்தந்தை அருட்பணி. S. சந்தனராஜ்

குடும்பங்கள்: 220

அன்பியங்கள்: 9

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி 

புதன் மாலை 06:30 மணி திருப்பலி

மாதத்தின் முதல் திங்கள் மாலை 06:00 மணி ஜெபமாலை திருப்பலி, நவநாள், நற்கருணை ஆராதனை தொடர்ந்து அன்னதானம்

திருவிழா: ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கொடியேற்றம் மே மாதம் 7-ம் தேதி தேர்பவனி திருவிழா, 8-ம் தேதி நன்றி திருப்பலி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. பீட்டர் ஆன்டனி, Thanjavur Diocese (late)

2. அருட்பணி. சேசுராஜ், MMI

3. அருட்பணி. ஜெனிபர், MMI

4. அருட்பணி. அமர்தீப் மைக்கேல், Thanjavur Diocese

1. அருட்சகோதரி. செங்கோல் சகாய மேரி, சேவா மிஷனரி

2. அருட்சகோதரி. செல்வராணி, புனித அகுஸ்தினார் சபை 

3. அருட்சகோதரி. டெய்சி ராணி, புனித அகுஸ்தினார் சபை 

4. அருட்சகோதரி. ஆரோக்கியா, கார்மேல் சபை

5. அருட்சகோதரி. மரிய ஜோதி, புனித அமலோற்பவ மாதா சபை மதுரை

6. அருட்சகோதரி. பாத்திமா மேரி, புனித அமலோற்பவ மாதா சபை மதுரை

7. அருட்சகோதரி. ஜோதி நிர்மலா, புனித அமலோற்போ மாதா சபை மதுரை

8. அருட்சகோதரி. மார்த்தாள், புனித அமலோற்பவ மாதா சபை மதுரை

வழித்தடம்:

பட்டுக்கோட்டை -அதிராம்பட்டிணம் வழி முதல்சேரி.

பட்டுக்கோட்டையில் இருந்து 2 கி.மீ தொலைவில் முதல்சேரி அமைந்துள்ளது.

Location map:

https://maps.app.goo.gl/8hV6qmjPFjVUxLid8

வரலாறு:

வயல் வெளிகளும், தென்னந்தோப்புகளும் நிறைந்து பசுமை பூமியாக விளங்கும் முதல்சேரியில், சுமார் 100 வருடங்களுக்கு முன்னர்  புனித மிக்கேல் அதிதூதரின் பெயரில் ஓலைக் குடிசை ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். அப்போது முதல் முதல்சேரி ஊரானது பழம்பெருமை வாய்ந்த, பட்டுக்கோட்டை உலக இரட்சகர் ஆலயத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஓலைக் குடிசை ஆலயம் அகற்றப்பட்டு, ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. அதன் பின்னர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 

இந்த ஆலயம் பழுதடைந்து போனதால், இந்த ஆலயத்திற்கு எதிர்ப்புறம் மேற்கு நோக்கிய வண்ணமாக புதிய ஆலயத்திற்கு 01.05.2011 அன்று மறைவட்ட முதல்வர் அருட்பணி. M. மரிய சூசை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

முதல்சேரி இறைமக்களின் தாராள நன்கொடை, உழைப்பு ஆகியவற்றின் காரணமாக ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று பங்குதந்தை அருட்பணி.‌ J. அந்தோணி சாமி, உதவி பங்குத்தந்தை அருட்பணி.‌ S. சந்தனராஜ் ஆகியோரின் முன்னிலையில் முதல்சேரி இறைமக்கள், பட்டுக்கோட்டை இறைமக்கள், அருகில் உள்ள ஊர் மக்கள் புடைசூழ 27.04.2023 அன்று மேதகு ஆயர் M. தேவதாஸ் அம்புரோஸ் D.D.,L.S.S.,S.T.D., அவர்களால் ஆலயமானது அர்ச்சிக்கப்பட்டு, பேரருள்பணி. L சகாய ராஜ் (Diocesan Adminstrator of Thanjavur) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புதுமைகள்:

பேய் பிடித்த பலர் இவ்வாலயம் வந்து, அதிதூதரின் வல்லமையால் பேய்களின் பிடியில் இருந்து விடுபட்டு, அற்புத சுகம் பெறுகின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் கவலையுறும் தம்பதியர் இவ்வாலயம் வந்து பச்சிலை அருந்திச் சென்று, விரைவில் குழந்தை செல்வம் பெற்றுக் கொண்டு, சாட்சியம் பகிர்கின்றனர்.

துறவற இல்லம்:

அமலோற்பவ மாதா சபை

கல்வி நிறுவனம்:

புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி 

பங்கேற்பு அமைப்புகள்:

மரியாயின் சேனை

புனித வின்சென்ட் தே பவுல் சபை

கோல்பிங் இயக்கம்

பீடப்பூக்கள்

புனித மிக்கேல் அதிதூதர் இளையோர் இயக்கம்

பாலர் சபை

பாடகற்குழு

மறைக்கல்வி.

புனித மிக்கேல் அதிதூதரின் பாதுகாவலில் சிறப்புற்று விளங்கும் முதல்சேரிக்கு வாருங்கள். இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்கள்.