புனித சூசையப்பர் ஆலயம்
இடம்: அப்பட்டுவிளை
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: குழித்துறை
மறைவட்டம்: முளகுமூடு
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை அருட்பணி. M. A. மிக்கேல் அலோசியஸ்
கைப்பேசி எண்: +91 89031 48050
குடும்பங்கள்: 300
அன்பியங்கள்: 10
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி
திங்கள், செவ்வாய், வியாழன், சனி காலை 06:00 மணி திருப்பலி
புதன் மாலை 06:00 மணி புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி
வெள்ளி மாலை 06:00 மணி திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:00 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர்
மார்ச் 18, 19 புனித சூசையப்பர் விழா
திருவிழா: ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து, மே 01-ம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும்.
அப்பட்டுவிளை மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. T. பிரான்சிஸ் (ரெய்பூர்)
2. அருட்பணி. லாரன்ஸ், CMF, (கல்கத்தா)
3. அருட்பணி. ஜோ டெரி தே போஸ்கோ, CMF (பிரான்ஸ்)
4. அருட்பணி. V. ஆன்றூஸ் (குழித்துறை மறைமாவட்டம்)
5. அருட்பணி. லில்லீஸ் கமல், MMI
6. அருட்சகோதரரர். ஆல்பிரட்
7. அருட்சகோதரி. பன்னீர் செல்வம்
8. அருட்சகோதரி. புஷ்பலதா
9. அருட்சகோதரி. கரோலின் அனுஜா
10. அருட்சகோதரி. ராத்தி
11. அருட்சகோதரி. ஷகிலா
12. அருட்சகோதரி. ஜெயசீலி ஜெனிபா
13. அருட்சகோதரி. டோமினிக்கா
14. அருட்சகோதரி. ஆன்றோ லூசியா
15. அருட்சகோதரி. ஜெயசீலி
16. அருட்சகோதரி. ஜாய்ஸ்
வழித்தடம்:
வில்லுக்குறி -மாடத்தட்டுவிளை -அப்பட்டுவிளை
தக்கலை -கொல்லன்விளை -அப்பட்டுவிளை
பேருந்துகள்: 11J, 6C, 45D
Location map: St. Joseph's Church
https://maps.app.goo.gl/cvGKUVTk3iB2LCSK8
பங்கின் வரலாறும் சிறப்பும்:
கிறிஸ்தவ மறைத்தளமாய், பாரம்பரிய கிறிஸ்தவ உணர்வோடு, காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் பங்கு உருவாகிய காலந்தொட்டுப் பல நூற்றாண்டுகளாய் வாழ்ந்துவருபவர்களே அப்பட்டுவிளை இறைசமூகத்தினர்.
ஆன்மீக ஊற்றாய்த் திகழ்கின்ற பல அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் வாழ்வியல் எடுத்துக்காட்டால் பண்பட்டனர் இம் மக்கள்.
இம்மண்ணின் பாரம்பரியமும், கலாச்சார பண்பாடும் பண்பட்ட பல அருட்பணியாளர்கள் உருவாக்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
மக்களின் நம்பிக்கையைக் கட்டிக்காக்க, பல குருசடிகள் கல்லறைத் தோட்டங்களில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. புனித வியாகுல அன்னை குருசடி, சந்தனமாதா குருசடி, புனித சந்தியாகப்பர் குருசடி, புனித அந்தோணியார் குருசடி போன்றவை இம் மக்களின் ஆன்மீக நம்பிக்கை வாழ்வுக்கு ஒளியூட்டியவை ஆகும். 1919ஆம் ஆண்டு மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயமானது, காரங்காட்டில் இருந்து பிரிந்து தனிப்பங்காக உருவெடுத்தது. பின்னர், புனித அந்தோணியார் குருசடி, செம்மண்விளையில் தங்கள் ஆன்மீகத் தேவைகளை மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை மூலம் நிறைவேற்றிக் கொண்டார்கள். சடையமங்கலம் ஊராட்சியின்கீழ் உள்ள கிராமங்களில் அப்பட்டுவிளை, செம்மண்விளை என்ற இரண்டு பகுதிகளும் சேர்ந்து மறைமாவட்டத்தால், அப்பட்டுவிளைப் பங்கு என அடையாளம் கொடுக்கப்பட்டது வரலாற்று உண்மை.
அருட்பணி. சூசைமிக்கேல் அடிகளார் காலத்தில் 1958ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சாம்பல் புதனன்று ஆலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, 24.04.1964 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.
தங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொண்ட மக்கள், புனித சூசையப்பரின் பாதுகாவலில் ஒப்படைக்கப் பட்டனர். அதன்பின் மக்கள் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள், தனிமனித வாழ்வில் குடும்பத்தில், சமூகத்தில் என நாளுக்குநாள் முன்னேற்றங்கள் இருந்தது.
அடிப்படைக் கல்வி அறிவை வழங்க, ஏராளமானவர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்தார்கள். குடும்பங்களும் பங்கும் சமூகமும் பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
1999ஆம் ஆண்டு அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலயமானது, மாடத்தட்டுவிளையில் இருந்து பிரிந்து, தனிபங்காக உதயமானது. கிளைப் பங்குகளாகப் புனித அந்தோணியார் ஆலயம் செம்மண்விளை -அப்பட்டுவிளை மற்றும் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், புலியூர்குறிச்சி ஆகியன செயல்படத் தொடங்கியது. தனிப் பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ஜோசப் காலின்ஸ் அவர்கள் பொறுப்பேற்றார்.
பங்கின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் குறைவில்லை என்பதன் அடையாளம் அழகிய ஆலயம். புதிய ஆலயப்பணிகள் அருட்பணி. வர்க்கீஸ் அவர்களின் பணிக்காலத்தில் 08.09.2008 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கப்பட்டு, அருட்பணி. ஜார்ஜ் பொன்னையா அவர்களால் நிறைவு செய்யப்பட்டு, 08.05.2015 அன்று குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. மைக்கேல் அலோசியஸ் அவர்களின் வழிகாட்டலில் சமூகநலக்கூடம் (29.12.2017), புதிய பங்குத்தந்தை இல்லம் (29.12.2020), புனித சூசையப்பர் நிதிநிறுவனம் (30.10.2022) மற்றும் கலையரங்கம் (17.12.2023) ஆகியன புதுப் பொலிவுடன் கட்டப்பட்டது.
ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ஆலய வளாகத்தில் பொது கிணறு, தண்ணீர்த் தொட்டி, அரசின் நியாய விலைக்கடை, கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி, புனித சூசையப்பர் சமூக நலக்கூடம், பாலர்பள்ளி போன்றவை அமைக்கப்பட்டது. சமூக சிந்தனையும், கடமையும், பொறுப்பும் மக்களுக்கு உண்டு என்பதற்கு மிகச்சிறந்த சான்றாகும்.
பங்கின் கெபி, குருசடி:
1. வியாகுல மாதா குருசடி: செப்டம்பர் மாதம் 15 -ம் தேதி திருவிழா
2. புனித மிக்கேல் அதிதூதர் குருசடி: செப்டம்பர் மாதம் 19-ம் தேதி திருவிழா
3. தூய லூர்து மாதா கெபி சனிக்கிழமை மாலை 05:00 மணி ஜெபமாலை, ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திருவிழா
நிறுவனங்கள்:
1. புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி
2. புனித சூசையப்பர் நிதிநிறுவனம்
3. புனித சூசையப்பர் சமூக நலக்கூடம்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. ஜோசப் காலின்ஸ்
2. அருட்பணி. ஆண்டனி. R
3. அருட்பணி. வர்க்கீஸ். S
4. அருட்பணி. ஜோசப் ராஜ். A
5. அருட்பணி. ஜார்ஜ் பொன்னையா
6. அருட்பணி. மரிய வின்சென்ட்
7. அருட்பணி. ஜார்ஜ் பொன்னையா
8. அருட்பணி. பிறிம்மஸ் சிங்
9. அருட்பணி. மைக்கேல் அலோசியஸ் (29.05.2017 முதல்....
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:
அருட்பணி. M. A. மிக்கேல் அலோசியஸ்