972 புனித அந்தோனியார் ஆலயம், கூவத்தூர்

      


புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: கூவத்தூர், கல்லாத்தூர் வழி, 621803

மாவட்டம்: அரியலூர்

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: ஜெயங்கொண்டம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித வனத்து அந்தோனியார் ஆலயம் வடுகபாளையம்

2. புனித சகாய அன்னை ஆலயம், கே.என் குப்பம்

பங்குதந்தை அருட்பணி. S. மரியதாஸ்

Mob No: +91 99762 40722

குடும்பங்கள்: 540 (கிளைப்பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 15 (கிளைப்பங்குகள் சேர்த்து 22)

சிறப்புகள்:

புனித அருளானந்தர் அவர்களால் கட்டப்பட்ட ஆலயம் 

புனித அந்தோனியாரின் திருப்பண்டம் அமைந்துள்ள ஆலயம்.

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 08:00 மணி திருப்பலி

திங்கள், புதன், வெள்ளி காலை 06:30 மணி திருப்பலி

செவ்வாய், வியாழன், சனி மாலை 06:30 மணி திருப்பலி

மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 06:00 முதல் இரவு 10:00 மணி வரை சிறப்பு குணமளிக்கும் ஜெபவழிபாடு, நற்கருணை ஆராதனை திருஎண்ணெய் பூசுதல், திருப்பலி, அன்பின் விருந்து

மார்ச் 19-ம் தேதி மாலையில் புனித அந்தோனியார் திருப்பண்ட தேர்பவனி, திருப்பலி, அன்னதானம்

திருவிழா: ஜூன் 5-ம் தேதி கொடியேற்றம் 12&13 திருவிழா

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. அந்தோணிசாமி (late)

2. அருட்பணி. பீட்டர் ஆரோக்கிய தாஸ், கும்பகோணம்

3. அருட்பணி. பால்ராஜ் மணியம், SDB

4. அருட்பணி. ஆரோக்கிய சாமி, Holy Cross

5. அருட்பணி. ஆரோக்கிய சகாயராஜ், கும்பகோணம்

6. அருட்பணி. அருள் செபாஸ்டின், கும்பகோணம்

மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள்.

வழித்தடம்: திருச்சி -ஜெயங்கொண்டம் -கூவத்தூர்.

Church Map location: St. Antony's Church, Koovathur

https://maps.app.goo.gl/ohp176p4EKyHshBv6

பங்கின் வரலாறு

கூவத்தூர் கிராமம், ஜெயங்கொண்டத்திலிருந்து வடக்கே 10 கி.மீ தொலைவில் விருத்தாசலம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் கொள்ளிடத்தின் வடகரை பகுதியில் பணியாற்றிய, அருள்பணி. ஆந்ரோ ஃப்ரையர் அடிகளார் தான் முதன் முதலில் இங்குள்ள மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியயை அறிவித்து, திருமுழுக்கு கொடுத்துள்ளார்.

1677-ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்த மராட்டிய மன்னனின் படையெடுப்பால், கொழை பணித்தளம் முழுமையாக உருக்குலைந்தது. ஆலயமும், அருட்பணியாளர் இல்லமும் தீ வைத்து எரிக்கப்பட்டு, சாம்பலாக்கப்பட்டது. இந்நிலையில் தான் 1678-ஆம் ஆண்டு மதுரை மாநில தலைவர் பேரருட்பணி. ரோட்ரிகஸ் அவர்கள் கூவத்தூரை பணித்தளமாக்கி, புனித அருளானந்தரை அனுப்பி வைத்தார்.

கூவத்தூர் வந்த புனித அருளானந்தர், ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டினார். அதன் அருகில் குருக்கள் தங்கும் இல்லமும் அமைத்தார். கூவத்தூர் பிராமணர்கள் பெரும் தொல்லை கொடுத்தாலும், உடையார்பாளையம் ஜெமீன்தாரின் ஆதரவு இருந்ததால் கோவில் கட்டும்பணி சிறப்பாக முடிவடைந்தது. புனித அருளானந்தர் இங்கிருந்துகொண்டு, கீழ் தஞ்சை பகுதி மக்களுக்கும், செஞ்சி பகுதி மக்களுக்கும் பணியாற்றினார்.

கூவத்தூர் பங்கு, வடவீக்கம் பங்கிலிருந்து 18-12-1937 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி பங்காக உருவாக்கப்பட்டது. அதன்பின் அருள்தந்தையர்கள் பங்கின் வளர்ச்சிக்காக உழைத்து வந்தனர்.

1984-ஆம் ஆண்டு ஆலயம் பழுதடைந்திருந்ததால் புதிய ஆலயமானது அருள்தந்தை S.I. அருள்சாமி அவர்களால் கட்டப்பட்டது. தொடர்ந்து பணியாற்றிய பங்குத்தந்தையர்கள், பங்குத்தந்தை இல்லம் மற்றும் ஆலய புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

2012-ஆம் ஆண்டு அருள்தந்தை. வின்சென்ட் ரோச் மாணிக்கம் அவர்களால், ஆலய புனரமைப்பு பணி மற்றும் பல பணிகளை மேற்கொண்டு பங்கின் பவழவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

புனித பதுவை அந்தோணியார் ஆலயம் நெடுஞ்சாலையில் அமைந்து இருப்பதாலும், ஆலய மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டாக இருந்ததாலும், தற்போது ஆலயம் கான்கிரீட் மேல்தளம் அமைக்கப்பட்டு, தரைத்தளம், திருப்பீடம், புனித அந்தோணியார் திருப்பண்ட பீடம் மற்றும் ஆலய முகப்பு, மணிகூண்டு அனைத்தும் மிகப்பெரிய பொருட்செலவில் இறைவனின் அருள்துணையோடும், மக்களின் தாராள பொருளுதவியோடும், ஆலய பணிகளை முழுமையாக அருள்தந்தை, S. மரியதாஸ் நிறைவுசெய்து, 18.12.2023 அன்று என் இல்லம் "இறைவேண்டலின் ஜெபவீடு" என்ற வார்த்தைக்கேற்ப அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. பீடச்சிறார்

4. இளையோர் இயக்கம்

5. கோல்பிங் இயக்கம்.

பங்கில் உள்ள சகோதரிகள் இல்லம்:

பெத்தல்மைட் சபை அருட்சகோதரிகள்.  

பங்கின் கெபி & அரங்கம்:

புனித அந்தோனியார் கெபி

புனித அந்தோனியார் மக்கள் மன்றம்.

பங்கில் பணியாற்றிய பங்கு பணியாளர்கள் பட்டியல்:

1. அருள்திரு. A.P. அருள்சாமி (1937-1939)

2. அருள்திரு. A. சிங்கராயர் (1939-1940)

3. அருள்திரு. V.S. லூர்துசேவியர் (1940-1942)

4. அருள்திரு. பிலவேந்திரநாதர் (1942-1945)

5. அருள்திரு. மரிய பிரான்சிஸ்நாதர் (1945-1948)

6. அருள்திரு. அம்புரோஸ் (1948-1953)

7. அருள்திரு. சின்னசாமி (1953-1960)

8. அருள்திரு. மதலைநாதர் (1960-1966)

9. அருள்திரு. T. ஆரோக்கியசாமி (1966-1969)

10. அருள்திரு. ரோச் மாணிக்கம் (1969-1978)

11. அருள்திரு. சந்தியாகு (1978-1979)

12. அருள்திரு. S.I. அருள்சாமி (1979-1984)

13. அருள்திரு. G. மைக்கேல் (1984-1989)

14. அருள்திரு. A. பிரான்சிஸ் (1989-1993)

15. அருள்திரு. M. சூசை (1993-1994)

16. அருள்திரு. A. சகாயராஜ் (1994-2000)

17. அருள்திரு. யூஜின் கருணாகரன் (2000-2003)

18. அருள்திரு. A. சூசைமாணிக்கம் (2003-2009)

19. அருள்திரு. ட. வின்சென்ட் ரோச் மாணிக்கம் (2009-2015)

20. அருள்திரு. S.J. சூசைமாணிக்கம் (2015-2018)

21. அருள்திரு. S. மரியதாஸ் (2018----)

புதுமைகள் பல புரியும் கூவத்தூர் புனித அந்தோனியார் ஆலயம் வாருங்கள்... புனிதரின் வல்லமையால் வேண்டும் வரங்களையும், நலன்களையும் பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருள்பணி. S. மரியதாஸ் அவர்கள்.