உன்னிடம் கையேந்தி உன்னிடம் அருள் வேண்டி பலிபீடம் அருகில் வந்தேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன்னிடம் கையேந்தி உன்னிடம் அருள் வேண்டி

பலிபீடம் அருகில் வந்தேன்

தந்தையே தகுதி இல்லாத அடியேனை ஏற்பீரே


1. நான் செய்த செயல்கள் எல்லாம் வெளிவேடம்

நான் சொன்ன வார்த்தை எல்லாம் பொய்கூற்று

இன்று என்னை மறந்து பாவம் இல்லா

வாழ்க்கையை அர்ப்பணம் செய்கின்றேன்


2. நான் வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் குறைவாழ்வு

நான் செய்த அன்பு எல்லாம் பதிலன்பு

இன்று என்னை மறந்து அன்பு நிறைந்த

வாழ்க்கையை அர்ப்பணம் செய்கின்றேன்