♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மண்ணில் வந்த குழந்தையே என்னில் வருவாயே
என் நெஞ்ச ராகம் உன் அன்பைப் பாடும்
ஆரிராரி ராரி ராரிரோ
1. விண்மலர் பூத்தது பூவிலே காரிருள் அகன்றது பாரிலே
உறவு மலரும் நேரத்திலே உதயம் தேடும் காலமிது
அமைதி தேடும் நெஞ்சம் உன்னில் என்றும் தஞ்சம்
குழந்தை நீயும் தவழ்ந்து என்னில் வந்திடுவாய்
2. உண்மையின் பேரொளி உதித்தது
நன்மையின் ஊற்றிங்கு சுரந்தது
என்னை இழந்த வேளையிலே
உன்னை அடைய வேண்டுகிறேன்