நின்னருள் நாடி நான் வந்தேன் இறைவா எந்நாளும் துணையாக கனிவோடு வர வேண்டும்


நின்னருள் நாடி நான் வந்தேன் இறைவா

எந்நாளும் துணையாக கனிவோடு வர வேண்டும்


1. வாழ்வும் நீ ஒளிதரும் தீபம் நீ

ஜீவன் நீ கருணையின் தேவன் நீ

தேவ தேவன் மானுவேலன் இராஜராஜன் இயேசுநாதர்

பாவி என்னை மீட்க வந்த அருள்மொழியே

பரம்பொருளே இறைமகனே


2. துன்பம் துயர் யாவும் உந்தன் அருளாலே

என்னை ஒருநாளும் கொஞ்சமும் அணுகாதே

சோதனை வந்தாலும் ஆ தாங்கிடும் உள்ளமே

அன்புடன் தேவனே வேண்டுமுன் தயவாலே


3. சிலுவையில் இறைவா நீர் தந்த உயிராலே

புதிய மறுவாழ்வும் இனிதாய் அடைந்தேனே

கிருபையின் இயேசுவே அருகினில் வரவேண்டும்

ஏழை என் வாழ்வில் தேவை உன் கருணை