பதுவைப் புனிதரின் புகழ்நாமம் பாடி ஆனந்தம் கொண்டாடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பதுவைப் புனிதரின் புகழ்நாமம் பாடி ஆனந்தம் கொண்டாடுவோம்

புனிதரின் ஆலயம் பாரெல்லாம் புகழ்சாற்ற

அவரின் வாழ்வாகுவோம்

புனிதரே வாழ்க புவியெல்லாம் வாழ்க

நாளுமே வாழ்க நானிலம் வாழ்க


1. போதனை செய்து சாதனை புரிந்த

உனக்கொரு கோவில் எழுப்பி நின்றோம்

விண்ணும் மண்ணுமே புகழ்ந்து பாடுதே

ஈடு இணையில்லா உன் புகழ் நினைத்தே

கோடியற்புதரே நாடி வந்தோமே எம் குறை தீர்ப்பாய்

எமை வாழ வைத்திடுவாய்


2. பதுவைப் பதியரே எம்மைக் காக்கும் முனிவரே

எம் ஊரை உம் தாள் பதம் வைக்கின்றோம்

இரவோ பகலோ வெயிலோ குளிரோ

எந்நாளும் உம் கரம் எம்மை நடத்தும்