♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும்
உள்ளத்தில் நீ வந்து உரையாட வேண்டும்
உலகினில் என் சொந்தம் நீயாக வேண்டும்
1. ஆறாத துயர் தீர்க்கும் அருமருந்தே
அழியாத வானகத் திருவிருந்தே
வழியாக வா என் வாழ்வினிலே
உயிராக வா என் உடலினிலே
ஒவ்வொரு பொழுதும் உந்தன் நினைவில்
உள்ளம் மகிழ்ந்திடுமே
ஒரு பொழுதேனும் உன்னை மறந்தால்
உயிரும் பிரிந்திடுமே
2. நீதியின் சுடராய் ஒளிர்பவனே
நிறைவாழ்வை எமக்குத் தருபவனே
ஒளியாக வா என் பாதையிலே
வளமாக வா என் வாழ்வினிலே
நீதியின் இறைவா நேர்மையின் தலைவா
உள்ளம் வாருமே
வான்மழை போல வானக வாழ்வின்
நிறைவைத் தாருமே