எனக்கு உதவி எங்கிருந்து வரும் இயேசுவின் இதயத்திலே இருந்து பொங்கி வரும்


எனக்கு உதவி எங்கிருந்து வரும்

இயேசுவின் இதயத்திலே இருந்து பொங்கி வரும்


1. என் கால்கள் இடறிவிழ விடவே மாட்டார்

என் கைகள் பிடித்து அவர் வழிநடத்துவார்

என்னைக் காத்திடும் அவர் அயர்வதில்லை

என்னைத் தாங்கிடும் அவர் உறங்குவதில்லை


2. அவரை நம்பி வாழ்கிறேன் பயப்பட மாட்டேன்

அவரோடு நடக்கிறேன் என்றும் மகிழ்ச்சியே

என் சார்பாக அவர் செயல்படுகின்றார்

என் வாழ்வெல்லாம் இனி அவர் செயலன்றோ