ஆகமன காலத்தில் செய்யத்தகும் செபம்

கார்திகை மீ 30 உ துவக்கிச் சேசுநாதர் பிறந்த நாள் மட்டும் தினந்தினம் இந்தச் செபத்தையும், இதற்குப்பின் வரும் நாற்பதுமணிச் செபத்தையும், கடைசி நாளில் இவைகளைச் செபித்து பின் ஒப்புக்கொடுக்கும் செபத்தையும் செபிப்பதே முறை .

ஆதித்தாய் ஆதித்தகப்பன் சன்மத்திலே பிறக்கப்போகிற சகலரிலும் திவ்விய குமாரனுக்கு தாயாராயிருக்கத் தெரிந்து கொள்ளப்பட்டவளுமாய், அதற்காக வேண்டிய சகல வரங்களையும் சம்பூரணமாய் அடைந்தவளுமாய், அடைந்த வரங்களைக் கொண்டு நடத்தின உன்னதமான புண்ணியங்களால் திருச்சுதனாகிய சர்வேசுரன் உம்முடைய திருவயிற்றில் வெகு சந்தோஷத்துடன் விரும்பி வரப்பண்ணினவளுமாயிருக்கிற மாதாவே, உம்முடைய திருக்குமாரன் பிறக்கப்போகிற நாள் நெருங்கி வருகிறதென்று நீர் அறிந்து அவரைப் பார்க்கவும், அவருக்கு ஊழியம் செய்யவும் உமக்கிருந்த ஆசையைப்பார்த்து, எனக்கும் இந்தத் திருநாளில் அவர்பேரில் ஆசைவர வேண்டு மென்றும், அவரைப் பார்த்து அவருக்கு ஊழியஞ் செய்ய நீர் பாத்திரமாய் இருக்கவேண்டுமென்றும், நீர் பண்ணின ஆயத்தத்தை தியானித்து, நானும் அவருக்கு யோக்கியமான ஊழியம் செய்ய ஆயத்தப்பட வேண்டுமென்றும், நீர் பண்ணின ஆயத்தத்தினால் உமது பேரில் திவ்விய குழந்தை பட்ட சந்தோஷம் ஒருக்காலும் என் பேரில் அவருக்கு வரக்கூடாதிருந்தாலும், எப்படியாகிலும் நான் இந்தத் திருநாளைக் கொண்டாடுகிறதில் உம்முடைய திருக்குமாரனுக்கு என்பேரில் குறைவராமல் சந்தோஷம் வரச் செய்யவேண்டுமென்றும், இந்த மூன்று முகாந்தரங்களைக் குறித்து நான் செய்யப்போகிற செபத்தை உம்முடைய திருப்பாதத்தில் அணிந்து, என்னுடைய கருத்து வியர்த்தமாய்ப் போகாதப்படிக்கு நீர் காதுகொடுத்து என் மன்றாட்டைக் கேட்டருள வேண்டு மென்றும் உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.

அர்ச். மாதாவே, நீர் திவ்விய குமாரனுக்கு மாதாவாகக் குறிக்கப்பட்ட க்ஷணம் ஆசீர்வதிக்கப்பட்டதென்று சகலரும் ஆண்டவருக்குத் தோத்திரம் பண்ணக்கடவோம். 1-திரி. 10-அருள். 1-திரி.

அர்ச். மாதாவே, நீர் திவ்விய குமாரனைப் பெற்ற க்ஷணம் ஆசீர்வதிக்கப்பட்டதென்று சகலரும் ஆண்டவருக்குத் தோத்திரம் பண்ண க்கடவோம். 1-திரி. 10-அருள். 1-திரி.

அர்ச். மாதாவே, நீர் முதல் முறை உம்முடைய திருக் குமாரனைக் கட்டி அரவணைத்த க்ஷணம் ஆசீர்வதிக்கப் பட்டதென்று எல்லோரும் ஆண்டவருக்குத் தோத்திரம் பண்ண க்கடவோம். 1-திரி. 10-அருள். 1-திரி.

அர்ச். மாதாவே, நீர் உம்முடைய திருக்குமாரனுக்கு முதல் முறை பால் கொடுத்த க்ஷணம் ஆசீர்வதிக்கப்பட்டதென்று எல்லோரும் ஆண்டவருக்குத் தோத்திரம் பண்ணக்கடவோம் 1-திரி. 10-அருள். 1-திரி.