தூய பரிசுத்ததனம் கொண்டிருக்கிற அநாதி பிதாவே! தேவரீர் மனிதர்களுக்கு வரி வேதத்ததைத் தந்தருளினபோது கட்டளையிட்ட தீர்த்தத்தைக் கொண்டு சுத்திகரிக்கப்படாத யாவரும் திருச்சபையிலே நின்று சிதைந்து போகக்கடவீர்கள் என்று திருவுளம் பற்றினதால், உம்முடைய திருச் சுதனாகிய சேசுநாதர் இரத்தத்தைக் கொண்டு, பரிசுத்தமாகாத யாவரும் நித்திய கேட்டுக்கு உள்ளாவார்களென்று கற்பித்ததாயிற்றே ஆகையால் கிருபை நிறைந்த பிதாவே! அந்தத் திவ்விய இரட்சகர் நாமத்தால் மந்திரிக்கப்பட்ட இந்தத் தீர்த்தத்தின் முயற்சியினாலே, அவருடைய திரு இரத்தத்தைக் கொண்டு எங்கள் பாவ அழுக்கெல்லாம் போக்கி, எங்கள் ஆத்துமங்களைச் சுத்திகரித்து இரட்சித்தருளும் சுவாமீ. தாவீதென்கிற இராசா தன் பாவங் களின் மிகுதியால் அழுது துக்கப்பட்டுத் தேவரீரை நம்பிக்கை யோடே நோக்கி "நீரும் ஈசோப் பென்கிற புல்லினால் என்மேல் தெளித்தருளுவீர், நானுஞ் சுத்தமாவேன்; நீர் என்னைக் கழுவுவீர், வெண் பனிக்கட்டியிலும் தூய்மையாவேனென்று" வேண்டினது போல, அடியோர்களுக்கு எங்கள் பாவங்களின் நிமித்தம் மனஸ் தாபப்பட்டுத் தேவரீர் எங்களைக் கழுவிச் சுத்தமாக்கவேண்டு மென்று மன்றாடுகிறேன். குருவானவர் இந்தத் தீர்த்தத்தை மந்திரிக்கையில் தேவரீரை வேண்டிக் கொண்டபடியே, உம்முடைய திருக்குமாரன் முகத்தைப் பார்த்து, இந்தத் தீர்த்தத்தின் முயற்சியினால் எங்கள் சத்துருவாகிய பசாசையும் அதன் தந்திரச் சோதனையையும் விலக்கி, வியாதிகளையும் நீக்கி, இஸ்பிரீத்துசாந்துவின் இஷ்டப் பிரசாதத்தினால் அடியோர்களை அர்ச்சித்துக் காத்தருள வேண்டு மென்று தேவரீரை மன்றாடுகிறோம்.