வான்படையின் ஆண்டவர் என்னோடுள்ளார் யாக்கோபின் இறைவன் அரணாயுள்ளார்


வான்படையின் ஆண்டவர் என்னோடுள்ளார்

யாக்கோபின் இறைவன் அரணாயுள்ளார்


1. அச்சமில்லையே அயர்வுமில்லையே

ஆயனவர் ஆடாக அவர் பின்செல்வேன்

தயக்கமில்லையே தளர்வுமில்லையே

தயை நிறைந்த அவர் கரத்தில் தஞ்சம் புகுந்தேன்


2. துன்பம் வரும் துயரம் வரும்

துணையாக அவர் இரக்கம் என்னோடிருக்கும்

கண்ணீர் பொங்கும் கவலையே மிஞ்சும்

எந்நாளும் எனைத் தாங்கும் அவர் பிரசன்னம்