எண்ணெய் இல்லா தீபம் போல் அணைந்து போகுதே என் ஆன்மா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எண்ணெய் இல்லா தீபம் போல்

அணைந்து போகுதே என் ஆன்மா (2)

ஆசை என்னும் காற்றிலே பாவம் என்னும் புயலாலே - 2

அணைந்து போகுதே என் தீபம்

தள்ளாடிப் போகுதே என் ஆன்மா


1. என் வீட்டு தீபம் நீர்தானென்று

இதயத்தில் அழைத்தேன் என் மன்னவா (2)

நீர் இந்த உலகத்தில் ஒளியான தேவா - 2

என் இல்லம் ஒளியேற்ற விரைவில் வா - 2


2. துயரத்தில் தள்ளாடும் என் வாழ்விலே

தவறாமல் தரவேண்டும் உம் ஆவியை (2)

பரிசுத்த தைலத்தால் அபிசேகம் செய்வாய் - 2

உன் சாட்சியாய் என்னை மாற்றிடுவாய் - 2