♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மலர் மிசை ஆகிய மன்னவா போற்றி
நிலமிசை எங்கும் உன் திருப்பெயர் போற்றி
ஏழிசை நாதனே ஈசனே போற்றி
ஆழிசூழ் அவனியின் ஆண்டவா போற்றி
தந்தையே போற்றி எந்தையே போற்றி இறைவனே போற்றி - 2
1. மணம்கமழ் தூபமாய் எழுபவா போற்றி
மனங்களில் தீபமாய் ஒளிர்பவா போற்றி
தன்னையே பலியென தருபவா போற்றி
உன்னையே உணவென அருள்பவா போற்றி
இயேசுவே போற்றி மைந்தனே போற்றி ஆயனே போற்றி - 2
2. அக்கினி பிழம்பென வருபவா போற்றி
அருட்பொரும் ஜோதியாய் எரிபவா போற்றி
அருட்கொடை ஏழையும் பொழிபவா போற்றி
ஆற்றலின் ஊற்றே ஆவியே போற்றி
ஆவியே போற்றி ஆற்றலே போற்றி ஜோதியே போற்றி - 2
3. மூவொரு இறைவனே போற்றி போற்றி
முழுமுதல் தலைவனே போற்றி போற்றி
அம்மையே அப்பனே போற்றி போற்றி