இறைவனின் ஆவி என் மேலே
அவர் என்னை இன்று அபிஷேகம் செய்துள்ளார்
1. ஏழைக்கும் நற்செய்தி உண்டு
பலவகை சிறைப்பட்டோருக்கும் விடுதலை உண்டு
ஆள்பவர் அடக்கியே ஒடுக்கும்
வறியவர் உரிமை பெறுவதன் தொண்டு
2. குருடர்கள் விழி பெறவேண்டும்
உலகத்தின் மெய்நிலை பார்த்திட வேண்டும்
குறைகளும் மறைந்தினி ஒருநாள்
அருள்தரும் ஆண்டென மலர்ந்திட வேண்டும்