என் ஆண்டவரே! அர்ச். தேவமாதாவினுடைய மன்றாட்டையும் நாங்கள் கொண்டாடுகிற அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டையும் குறித்து, குருவானவர் தமக்காகக் கேட்கிற மன்றாட்டையும், நான் யாருக்காக வேண்டிக் கொள்ள வேண்டியிருக்குமோ, அவர்கள் கேட்கிற மன்றாட்டையும் கட்டளை செய்தருளும். மேலும் என் ஆண்டவரே! நானும் அவர்களும் மோட்சக் கரை சேர, எங்களுக்கு வேண்டிய வரப்பிரசாதங்களை எல்லாம் சேசு கிறீஸ்துநாதருடைய திரு முகத்தைப் பார்த்துத் தந்தருளும். ஆமென்.