உன் கரம் பற்றி வழி நடப்பேன் நீ காட்டும் பாதையிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன் கரம் பற்றி வழி நடப்பேன் நீ காட்டும் பாதையிலே

தெரியாத பாதை முடியாத போதும்

பலம் தரும் உன் துணையே


1. நிலையான வாழ்வு நிறைவான மகிழ்வு

தொலைதூர வழி தாண்டியே

பல காலமாகும் தலைவா உன் பாதம்

மகிழ்வோடு சரணாகவே

தொலை தூரக் கனவில் மனம் தேற்றும் நிறைவு

ஒரு போதும் நான் வேண்டிலேன்

அடியடியாய் படிப்படியாய் தொடர்ந்தாலே பேரின்பமே


2. இருள் சூழ்ந்த போதும் இடர் வந்த போதும்

சிறிதேனும் பயமில்லையே

தடுமாறினாலும் தடம் மாறினாலும்

பலவீனம் எனக்கில்லையே

என் காதில் கேட்கும் உன் பாத ஓசை என்னோடு நடமாடுமே

களைப்பினிலும் சலிப்பினிலும் கலங்காது முன்னேறுவேன்