ஆண்டவர் மாண்புடன் புகழ் பெற்றார் எனவே அவரைப் பாடிடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவர் மாண்புடன் புகழ் பெற்றார்

எனவே அவரைப் பாடிடுவோம் (2)


1. குதிரை வீரனைக் குதிரையுடன்

அவரே கடலில் வீழ்த்தி விட்டார்

எனக்கு மீட்பாய் அவரே என்

துணையும் காவலும் ஆயினரே


2. இறைவன் எனக்கு இவர் தானே

இவரையே போற்றி புகழ்ந்திடுவேன்

என் முன்னோரின் இறைவன் இவர்

இவரை ஏற்றிப் புகழ்ந்திடுவேன்