இறைவனின் புனிதரே வாழ்க - இன்று இறைஞ்சி உம் திருத்தலம் வந்தோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவனின் புனிதரே வாழ்க - இன்று

இறைஞ்சி உம் திருத்தலம் வந்தோம்

அன்பர் அந்தோணியார் உம் அருளாலே - யாம்

அற்புத வரம் பல அடைந்தோமே

நன்மையின் நாயகனே கோடி நன்றிகள் சாற்றுகின்றோம்


1. வாழ்வினில் துன்பங்கள் வருகையிலே

வந்தோம் உம் திருவடியே

உம் முகம் நோக்கிப் பார்க்கையிலே

உவந்து எம் துயர்களைத் துடைப்பீரய்யா

சமயம் பலவும் கடந்து உம்மை

சந்திக்கும் பக்தர்கள் மனதில்

கவலை நீங்கிட கலக்கம் அகன்றிட

கருணை மழையை நீர் பொழியுமய்யா


2. அலகையின் ஆதிக்கம் உயர்கையிலே

அண்ணலே ஒடுக்குகின்றீர்

நோய்களும் பிணிகளும் வாட்டுகையில்

நலம் தரும் புதுமைகள் புரியுமய்யா

குழந்தை இயேசுவைக் கரத்தில் ஏந்தி

கொஞ்சிடும் பேறு நீர் அடைந்தீர்

வாழ்க புனிதரே வந்தோம் பாதமே

வளங்கள் தந்து வழிநடத்துமய்யா