என் இயேசுவே என்னை மன்னியும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் இயேசுவே என்னை மன்னியும்


1. உன் குரல் எனத் தெரிந்தும்

கேட்காமல் நான் திரிந்தேன்


2. உன் முகத்தைக் கண்ட பின்னும்

பேசாமல் திரும்பிக் கொண்டேன்


3. உன் அருள் எனில் இருந்தும்

உணராமல் நான் வாழ்ந்தேன்


4. உன் வழியை அறிந்திருந்தும்

நடவாமல் உதறிச் சென்றேன்


5. உதவி செய்ய வாய்ப்பிருந்தும்

உதவாமல் உதறிச் சென்றேன்


6. உண்மை வாழ்வில் தெளிவிருந்தும்

உலகப் போக்கில் நான் அலைந்தேன்