ஜெபி மகனே ஜெபி மகளே
ஜெபிப்பதனால் நித்திய பெலனுண்டு
நீ ஜெபிக்கும் போது நிச்சயம் பதிலுண்டு
கண்ணீரோடு ஜெபித்துப் பார்
கதறலோடு ஜெபித்துப் பார்
கடவுள் உனக்கு செவிகொடுப்பாரே
1. கேளுங்கள் தருவேன் என்றாரே
தேடுங்கள் கிடைக்கும் என்றாரே
தட்டுங்கள் திறக்கும் என்றாரே
நம் இயேசு நமக்கு வாக்கு தந்தாரே
2. மனம் திரும்பி மண்டியிடு
மன்னிப்பைக் கேட்டுவிடு
மனதுருகும் தெய்வம் இயேசு
உன்னை மார்போடு அணைத்துக் கொள்வாரே