சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும்

சுவாமி தயவாயிரும்

கிறிஸ்துவே பிரார்த்தனை கேட்டருளும்

கிறிஸ்துவே நன்றாகக் கேட்டருளும்

பரத்தைப் படைத்த பிதா சர்வேசுரா

எங்களை தயைபண்ணி இரட்சியும்

உலகத்தை மீட்ட சுதன் சர்வேசுரா

எங்களை தயைபண்ணி இரட்சியும்

பரிசுத்த ஆவி சர்வேசுரா

எங்களை தயைபண்ணி இரட்சியும்

தமத்திரித்துவ ஏக சர்வேசுரா

எங்களை தயைபண்ணி இரட்சியும்

அர்ச்சயசிஷ்ட மரியாயே

சர்வேசுரன் அர்ச்சய மாதாவே

கன்னியரில் நல்ல கன்னிகையே

கிறிஸ்துவினுடைய மாதாவே

தேவப் பிரசாதத்தின் மாதாவே

மகாப் பரிசுத்த மாதாவே

அத்தியந்த விரத்தி மாதாவே

பழுதற்ற கன்னி மாதாவே

கன்னி சுத்தங் கெடாத மாதாவே

அன்புக்குப் பாத்திர மாதாவே

ஆச்சரியமான மாதாவே

நல்லாலோசனை மாதாவே

சிருஷ்டிகருடைய மாதாவே

இரட்சகருடைய மாதாவே

மகாப் புத்தியுள்ள கன்னிகையே

வணக்கத்துக்குரிய கன்னிகையே

ஸ்துதிக்க யோக்கியமான கன்னிகையே

சக்தியுடைத்தான கன்னிகையே

தயை மிகவுள்ள கன்னிகையே

விசுவாசியான கன்னிகையே

தருமத்தினுடைய கண்ணாடியே

ஞானத்திற்கு இருப்பிடமே

எங்கள் சந்தோஷத்தின் காரணமே

ஞானம் நிறைந்த பாத்திரமே

மகிமைக்குரிய பாத்திரமே

அத்தியந்த பக்தியுள்ள பாத்திரமே

தேவ ரகசிய ரோஜாப்பூவே

தாவீது ராஜாவின் உப்பரிகையே

தந்த மயமான உப்பரிகையே

சொர்ண மயமான ஆலயமே

வாக்குத்தத்தத்தின் பெட்டகமே

பரலோகத்தினுடைய வாசலே

விடியற்காலத்தின் நட்சத்திரமே

வியாதிக்காரர்க்கு ஆரோக்கியமே

பாவிகளுக்கு அடைக்கலமே

கஸ்திப் படுவோர்க்குத் தேற்றரவே

கிறிஸ்தவர்களுடைய சகாயமே

சம்மனசுக்களின் இராக்கினியே

பிதாப்பிதாக்களின் இராக்கினியே

தீர்க்கதரிசிகளின் இராக்கினியே

அப்போஸ்தலர்களின் இராக்கினியே

வேதசாட்சிகளின் இராக்கினியே

ஸ்துதியர்களுடைய இராக்கினியே

கன்னியர்களுடைய இராக்கினியே

சகல அர்ச்சிஷ்டவரின் இராக்கினியே

ஜென்மப் பாவமில்லா இராக்கினியே

மோட்ச ஆரோகண இராக்கினியே

திருச்செபமாலையின் இராக்கினியே

சமாதானத்தின் இராக்கினியே

திருக்குடும்பத்தின் இராக்கினியே

இந்திய தேசத்தின் இராக்கினியே

உலகத்தின் பாவங்களைப் போக்கும்

உத்தம செம்மறிப் புருவையாம்

உன்னத இயேசு கிறிஸ்துவே

எங்கள் பாவங்களைப் போக்கியருளும்

எங்கள் பிரார்த்தனை கேட்டருளும்

எங்களைத் தயை பண்ணி இரட்சியும்