இறை இரக்கத்தின் இராஜாவே இயேசுவே என் நல் இயேசுவே


இறை இரக்கத்தின் இராஜாவே

இயேசுவே என் நல் இயேசுவே

எங்கள் மீதும் முழு உலகின் மீதும்

அய்யா இரக்கமாயிரும்


1. பாதை தவறினேன் என்னைத் தேடி வந்ததேன்

தோளில் தூக்கியே என்னைக் கிடையில் சேர்த்ததேன்

எண்ணில்லாத இரக்கம் கொண்டு என்னை மீட்கவோ

முடிவில்லாத உறவில் என்னை அணைத்துக் கொள்ளவோ

இயேசு மன்னவா இறை இரக்கம் நிறைந்தவா


2. ஊதாரிப் பிள்ளையானேன் எந்தன் வருகை பார்த்ததேன்

திரும்பி வருகையில் என்னை இறுக அணைத்ததேன்

உயிரும் உறவும் எனக்கு நீர்தான் என்று உணர்த்தவோ

உண்மை வழியில் உன்னோடு சேர்ந்து பயணம் செய்யவோ

இயேசு மன்னவா இறை இரக்கம் நிறைந்தவா