♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை - உந்தன்
குரலைக் கேட்டு உன்னை மீட்டு
வானகம் சேர்க்கும் தேவனவர்
1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஒளியாய்
வந்தார் மாபரன் இயேசு - உயிர்
தந்துனை மீட்டார் இயேசு கல்வாரி சிகரமதில்
2. பாவிகள் நம்மை மீட்கவே உலகில்
ஆதவனாய் ஒளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்து - நம்மை
வேதனையில் வெற்றி பெறச் செய்தார்