என்னோட ஆசைய
உங்கிட்ட சொல்லுறேன் கேக்கணும் இயேசப்பா
என்னோட நண்பன் உன்னோட நானும் பேசணும் இயேசப்பா (2)
1. நான் கண்ணு முழிக்கும் போது ஓன் மொகத்த பாக்கவேணும்
நான் காதில் கேட்பதெல்லாம் ஓன் வார்த்தையாக வேணும்
ஒன்னோட நெனப்புல நான் தெனமும் வாழவேணும்
ஒன்னோட மடியில நான் இப்போ அயர்ந்து தூங்கவேணும்
2. இப்போ நல்ல வெதையா நானும் ஓன் அருளில் மாறவேணும்
இந்த நாளில் நல்ல செய்தி நான் எங்கும் சொல்லவேணும்
என்னோட பகைவருக்கும் நான் ஒதவி செய்யவேணும்
ஒன்னோட சாட்சியாக என் வாழ்வு மாறவேணும்