கருணாம்பர சேசுவே! ஆத்துமங்களை நேசிக்கிறவரே, தேவரீருடைய திவ்விய இருதயமானது பூங்காவனத்திலும் சிலுவையிலும் பட்ட அவஸ்தையையும், தேவரீருடைய மாசில்லாத திருத் தாயார் அனுபவித்த வியாகுலங்களையும் பார்த்து இன்று தானே பூமியில் எங்கும் அவஸ்தையாய்க் கிடந்து சாகப்போகிற பாவிகளை தேவரீருடைய திரு இரத்தத்தினால் சுத்திசெய்தருளும்.
அவஸ்தைப்பட்ட சேசு கிறீஸ்து நாதருடைய திவ்விய இருதயமே, மரிக்கிறவர்கள் பேரில் இரக்கமாயிரும், ஆமென்.