ஆதி தேவ தேவை ஈன்ற அன்னையே எம் அன்னையே மாதயை செய் தாசரெம்மேல் மாசிலாத மாமரி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆதி தேவ தேவை ஈன்ற அன்னையே எம் அன்னையே

மாதயை செய் தாசரெம்மேல் மாசிலாத மாமரி


1. தீமை வாரி வீழ்ந்தலைந்துன் சேயருன்னையண்டினோம்

மாமலர்த்தாள் தந்துதவாய் மாசிலாத மாமரி


2. தீயரெம்மைத் தூயராக்கி சேர்த்திடுவாய் மோட்சமே

மாயப் பேயை வென்ற ஜென்ம மாசில்லாத மாமரி


3. சீரி சூசை பாரி எங்கள் தீமை போக்கியாதரி

வாரியின் சீர் தாரகையே மாசில்லாத மாமரி