சகாயத்தாயின் சித்திரம் நோக்கு அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சகாயத்தாயின் சித்திரம் நோக்கு

அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு

எத்துணைக் கனிவு எத்துணைத் தெளிவு

வேண்டிடும் மனதுக்கு வரும் நிறைவு


1. குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்

கொடூர சிலுவையும் கண்டு மிரண்டு

தத்தித் தாய் மேல் சாய்ந்திடும் இயேசுவை

சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ


2. அம்மா என்று கூவ அபயம் தந்து வருவாள்

இம்மாநிலத்தில் இவள் போல் இரங்கும் தாயும் உளரோ