நித்திய சர்வேசுரா! உம்முடைய சர்வ வல்லமையுள்ள மகத்துவத்துக்கு முன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து கிடக்கிற அடியேனைப் பாரும். தேவரீரை ஆராதித்து இந்த இரவில் நீர் எனக்கு செய்த உபகாரங்களுக்காக நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன். தேவரீருடைய திவ்விய சித்தத்தை நிறைவேற்று வதற்காகவும், நீர் எனக்குச் செய்த சகல உபகாரங்களுக்கு நன்றியறிந்த தோத்திரமாகவும், பாக்கியமான மரணத்தையும், நித்திய சீவியத்தையும் நான் அடைவதற்காகவும், எனது இன்றைய கிரியைகள், வார்த்தைகள், நினைவுகள் எல்லாவற்றையும் தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். இதனால் என் பாவங்களுக்கு உத்தரிப்பாகவும், உத்தரிக்கிற ஆத்துமாக்கள் அவதி குறையவும், பாவிகள் மனந் திரும்பவும், திருச்சபையின் கருத்துகள் பாக்கியமாய் நிறைவேறவும் ஆசிக்கிறேன். இவைகளைச் சேசு நாதருடையவும், தேவ மாதாவினுடையவும், சகல அர்ச்சியசிஷ்ட வர்களுடையவும் பேறுகளோடும், திருச்சபையின் பொக்கிஷங் களோடும் ஒன்றாய்ச் சேர்க்கிறேன். தேவரீரை மன்றாடுகிற வரப்பிரசாதத்தின் பலமுள்ள உதவியைக் கொண்டு, ஒரு சாவான பாவத்தையானாலும் மற்றப் பாவத்தை என்கிலும் ஒருக் காலும் கட்டிக்கொள்ள மாட்டேன் என்றும், இந்த நாளின் தனி ஆத்தும் சோதனைக்குப் பின் பிரமாணிக்கமாய் இருப்பேன் என்றும் உறுதி யான பிரதிக்கினைப் பண்ணுகிறேன். இன்றைக்கு நான் அடையக் கூடுமான சகல பலன்களையும் பெற்றுக் கொள்ளவும், உலகமெங்கும் செய்யப்படப் போகிற சகல திவ்விய பூசை பலிகளுக்கும் பங்காளியாயிருக்கவும் ஆசையாயிருக்கிறேன், ஆமென்.