♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
காற்றோடு கரையும் தீபங்கள் கண்ணீரில் நனையும் கோலங்கள்
எந்நாளும் என் நெஞ்சில் உன் எண்ணம்
இந்நேரம் உனக்காக ஒரு பாடல்
என் தேவா கேளாயோ நான் பாடும் ஜீவராகம்
1. உனது ஆலய பீடங்களில்
தினம் தினமும் நான் மலர்ந்தேன் ஆ
உனது மண்டபத்தின் வாயில்கள் காணாமல்
என் பாடல் ஓயாது
நாளும் உனது நினைவில் நானும்
2. எங்கெங்கு காணினும் உன் முகமே
என் மனமே கண்ணுறங்கு ஆ
உனது நினைவென்னும்
நதிதன்னில் நாள்தோறும் வருகின்ற ஓடம்போல்
அன்பே நானும் எந்நாளும் வாழ்வேன்