வரம் தந்தாளுவாய் தினம் அந்தோணி முனி வந்தோம் உம் மைந்தர்கள் யாம்


வரம் தந்தாளுவாய் தினம் அந்தோணி முனி

வந்தோம் உம் மைந்தர்கள் யாம்

புனிதா நீ இனிதாக இன்றுன்னை போற்றி செய்தோம்


1. இயேசுவைக் கரத்தில் ஏந்திடும் நாதா

மாந்தர்களின் காவலா

மாய உலகில் வாழும் யாம்

மாய்ந்திடா தெம்மைக் காப்பாய்


2. பன்னரும் வரங்கள் என்னரும் வகையாய்

உன்னாலடைந்தோ மல்லோ

என்னே உனது தயை யாம்

சொன்னால் மிகுவோர் வரை


3. பஞ்சம் படைநோய் நின்றெம்மைக் காப்பாய்

பாலர் எமை ஆளுவாய்

பாவலர் போற்றும் தூயா - உன்

பாதமலர் பணிந்தோம்