சுந்தர ஜோதி வந்தருளாயா எந்தன் நெஞ்சிலே எழுந்தருளாயா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சுந்தர ஜோதி வந்தருளாயா

எந்தன் நெஞ்சிலே எழுந்தருளாயா

தந்தையும் தாயும் நீ, தலைவனும் துணையும் நீ

வேந்தனும் விருந்தும் நீ, வேந்தனும் குருவும் நீ


1. ஈசன் எமக்குத்தந்த சிறந்ததோர் வரமும் நீ

இயேசுவின் மாட்சியெல்லாம் இயம்பிடம் சாட்சியும் நீ

நேசமோருருவாகி நின்றிடும் தெய்வமும் நீ

ஆசையைத் தீர்க்கின்ற அமுத பார்க்கடலும் நீ


2. கோயிலாய் உள்ளத்தைக் கொண்டிடும் தெய்வமும் நீ

மேவிய மனவிருளை விலக்கும் பரம்சுடர் நீ

பாவமா மாசகற்றும் பாவன தீர்த்தமும் நீ

நாவுபோல் காட்சி தந்த நலம் திகழ் ஞானமும் நீ