♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
பாலா தேவ பாலா தேவா எங்கள் தேவா
காண்கின்ற உலகம் உனது
காவியம் பாடும் என் மனது
ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ
1. வானவர் பாடல் ஆயர்கள் தேடல்
வையகம் கண்டதே புது விடியல்
தேனினும் இனிய தெய்வீக மலரே
தெவிட்டா அமுதே தாலேலோ ஆரிரோ
2. வெண்பனித் தூரல் வீசிடும் சாரல்
வேந்தனே உன்னை வருத்திடுதோ
கண்மணி நீயே கன்னியின் கனியே
கடவுளின் மகனே தாலேலோ ஆரிரோ