♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இதோ என் கைகளில் உன்னைப் பொறித்துள்ளேனே
நான் உன்னை ஒரு போதும் மறப்பதில்லையே
1. கடலின் அலையைப் போல துன்பம்
ஓயாமல் வந்தாலும்
மலையைப் போல சோதனைகள்
உன் வாழ்வைச் சூழ்ந்தாலும்
மகனே நீ அஞ்சாதே மகளே நீ கலங்காதே
நான் உன்னை விட்டு விலகுவதும் கைவிடுவதுமில்லையே
2. பெற்ற தாயும் உன்னைப் பிரிந்து
போகும் நிலை வந்திடலாம்
உற்ற நண்பர் உன்னைப் பிரிந்து
தூர விலகிப் போய் விடலாம்