என் ஆற்றலின் ஆண்டவரை நான் எந்நாளும் போற்றிடுவேன்


என் ஆற்றலின் ஆண்டவரை நான்

எந்நாளும் போற்றிடுவேன் - நல்

அருள்மொழி கேட்க காலமெல்லாம் அவர்

காலடி அமர்ந்திடுவேன்


1. ஆண்டவர் எனது அரணாவார்

அவரே எனக்கென்றும் துணையாவார்

வலிமையும் வாழ்வும் வழங்கும் நல்தேவன்

என்னுடன் இருக்கின்றார் என்றும் இருக்கின்றார்


2. ஆண்டவர் எனது மீட்பராவார்

அவரே எனக்கென்றும் ஒளியாவார்

வாழ்வாய் வழியாய் விளங்கும் நல்தேவன்

சீர்வழி நடத்திடுவார் அவர் வழி தொடர்ந்திடுவேன்