விசுவாச முயற்சி
சர்வேசுரா சுவாமீ, திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினாலே நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.
நம்பிக்கை முயற்சி
என் சர்வேசுரர் சுவாமீ, தேவரீர் வார்த்தைப்பாடு கொடுத்தபடியினாலே சேசுநாதசுவாமி பாடுபட்டுச்சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும், மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீர் என்று உறுதியாக நம்பியிருக்கிறேன். ஆமென்.
தேவசிநேக முயற்சி
என் சர்வேசுரா சுவாமீ, தேவரீர் மட்டில்லாத நேசித்திற்கு பாத்திரமாயிருக்கிறபடியினாலே, எல்லாவற்றையும்விட உம்மை நான் முழு மனதோடே நேசிக்கிறேன். மேலும் உம்மைப் பற்றி என்னை நான் நேசிப்பதுபோலே மற்ற எல்லாரையும் நேசிக் கிறேன். ஆமென்.