♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
வங்கக்கடல் கொஞ்சும் முத்துநகரினை
காத்திடும் அன்னை பனிமயமே இடியைத் தாங்கியவளே
அமலியாம் உம்மைப் பாடுகின்றோம்
வாழ்க வாழ்க பனிமரியே வாழ்க வாழ்க தாய்மரியே
1. பாவத்தின் ஆட்சிக்குத் திரை வைத்து
பாவிகள் மீட்பின் கருவியானாய்
தேவனின் தாயே எம் அன்னையும் நீயே
வாழ்க வாழ்க பனிமரியே வாழ்க வாழ்க தாய்மரியே
2. ஆகட்டும் என்றாய் அடிமையானாய்
அன்னையாய் உயர்ந்தாய் அரசியானாய்
பெண்குலப் பெருமையே நீ பேரருட் தாய்மையே
வாழ்க வாழ்க பனிமரியே வாழ்க வாழ்க தாய்மரியே