அன்பே என்றானவா என் எண்ண நிறைவானவா உன் மேன்மை வானம் என்றாகினாலும் என் ஏழ்மை குறை தீர்த்தவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பே என்றானவா என் எண்ண நிறைவானவா

உன் மேன்மை வானம் என்றாகினாலும்

என் ஏழ்மை குறை தீர்த்தவா


1. வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில்

வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய்

பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில்

எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய்

மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான்

என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன்


2. உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன்

உன் நெஞ்ச மலராலே எனை மூடினாய்

கண் பார்வை அருள் போதும் என நாடினேன்

என் பாதை வழி செல்லும் துணையாகினாய்

மண்மீது காலூன்றும் தொடுவானமாய்

என்மீது நீ வந்து நானாகிறாய்