சாகா வரம்தரும் உணவு - நல் தேவாமிர்த உணவு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சாகா வரம்தரும் உணவு - நல் தேவாமிர்த உணவு


1. பாலை நிலத்தில் அன்று

பரமன் தந்தார் உணவு

போதிய உணவும் உண்டு

போனார் மக்கள் மாண்டு


2. வானம் பொழிந்த உணவு

வாழ்வு நல்கும் உணவு

இறைவன் அன்றோ உணவு

இதனால் அங்கு நிறைவு


3. உடலே உண்மை உணவு

உதிரம் உண்மை பானம்

அருந்தி அவரில் நிலைத்தால்

அழியா உயிர்ப்பு உண்டு


4. ஆண்டவர் வருகையை நினைந்து

அருந்தும் ஆயத்த விருந்து

போகும் வழியின் உணவு

சேரும் வீட்டின் முன்சுவையே


5. இனிவரும் விருந்தில் நாமும்

இறைவனை என்றும் புகழ்ந்து

இனிமேல் சாவே இல்லா

இல்லம் வாழ்வோம் இனிது