புனிதரே அருள்மரி வியான்னியே
புகழ்கின்றோம் குருக்களின் காவலரே
1. ஆர்ஸ் என்னும் கிராமம் அதிசயிக்க
அரும்பணி ஆற்றிய குரு நீரே
அகிலமும் வாழ் பங்குக் குருக்களுக்கு
அரிய முன்னோடி ஆகினீரே ஆ
ஆயிரம் ஆயிரம் மனிதர்களை
ஆண்டவன் அரசில் சேர்த்தவரே
2. எளிமை தாழ்ச்சி ஜெபவாழ்வு
இடைவிடா உழைப்பு இவற்றோடு
பரிவுடன் பாவம் பொறுத்திடவே
பலமணி நேரம் உழைத்தீரே ஆ
அமைதியில் மறைந்து வாழ்ந்தவரே
ஆண்டவன் அருளால் நிறைந்தவரே